தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

குல்தீப் செங்கார் பாலியல் வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

28 Dec 2025, 3:19 pm
குல்தீப் செங்கார் பாலியல் வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
<p><strong>குல்தீப் செங்கார் பாலியல் வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை</strong></p> <p>பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதி யில் கடந்த 2017ஆம் ஆண்டு &nbsp;சிறுமியைக் கடத்தி பாலியல் வன் கொடுமை செய்த பாஜக முன்னாள் எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் கைது செய்யப்பட்டார். மேலும் பாதிக்கப் பட்ட பெண் (பாதிக்கப்பட்ட வயதில் அவர் &nbsp;சிறுமி) உள்பட உறவினர்கள் காரில் சென்றபோது லாரி மோதி 2 பேர் பலி யானார்கள். பாதிக்கப்பட்ட சிறுமி படு காயங்களுடன் உயிர் பிழைத்தார். இச் &nbsp;சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலை யை ஏற்படுத்தி இருந்த நிலையில், இதி லும் குல்தீப் சிங் செங்காருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த &nbsp;வழக்கில் குல்தீப் சிங் செங்காருக்கு தில்லி நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து குல்தீப் சிங் தாக்கல் &nbsp;செய்த மனுவை விசாரித்த தில்லி உயர் &nbsp;நீதிமன்றம் டிச., 23 அன்று அவருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்ததோடு, ஜாமீனும் வழங்கி யும் உத்தரவிட்டது. இதற்கு எதிராக தில்லி &nbsp;உயர்நீதிமன்றம் முன் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட மகளிர் &nbsp;அமைப்புகள், பாதிக்கப்பட்ட பெண்ணின் &nbsp;தாயார் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே தில்லி உயர்நீதி மன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய் &nbsp;துள்ளது. இதற்காக சிறப்பு மனுவை தாக்கல் செய்துள்ளது. அதில்,&rdquo;குல்தீப் சிங் செங்காரின் ஆயுள் தண்டனையை நிறுத்திய தில்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும்&rdquo; என முறையிட்டுள்ளது. இந்நிலையில், சிபிஐயின் மேல் முறை யீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் திங்க ளன்று விசாரணை வரவுள்ளது. உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி சூர்யா காந்த் &nbsp;தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட &nbsp;அமர்வு இந்த மனுவை &nbsp;விசாரிக்க உள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.