தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

குல்தீப் செங்கார் விடுதலை நீதித்துறைக்கு கரும்புள்ளி!

27 Dec 2025, 4:17 pm
குல்தீப் செங்கார் விடுதலை நீதித்துறைக்கு கரும்புள்ளி!
<p><strong>குல்தீப் செங்கார் விடுதலை நீதித்துறைக்கு கரும்புள்ளி!&nbsp;சிபிஎம் அரசியல் தலைமைக்குழு &nbsp;கடும் விமர்சனம்</strong></p> <p>புதுதில்லி, டிச.27- உன்னாவ் பாலியல் வல்லுறவு &nbsp;வழக்கில் தண்டனை பெற்று சிறை யிலிருந்த பாஜக எம்எல்ஏ-வுக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருப்பது, நீதித்துறைக்கு ஒரு கரும்புள்ளி என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி &nbsp;கடுமையாக கூறியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு கூட் &nbsp;டம், வெள்ளிக்கிழமை (டிச. 26) &nbsp;அன்று புதுதில்லியில் நடைபெற் றது. அதனைத் தொடர்ந்து அது வெளியிட்ட அறிக்கையிலேயே, உன்னாவ் வழக்கு தொடர்பான உத்தரவை விமர்சித்துள்ளது. &ldquo;உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ்-வில் சிறுமி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக் &nbsp;கிய வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முக்கிய நபரான, முன்னாள் பாஜக &nbsp;எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கா ருக்கு தில்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. &nbsp;சாட்சிகளையும், பாதிக்கப்பட்ட பெண்ணையும் பாதிக்கும் வகை யில் குற்றவாளி தரப்பினர் மேற் கொண்ட பல்வேறு வன்முறை மற் &nbsp;றும் மிரட்டல் முயற்சிகள் குறித்து பாதிக்கப்பட்ட பெண் விரிவாகப் பதிவு செய்துள்ளார். பாதிக்கப்பட்ட &nbsp;பெண்ணுடைய தந்தையின் காவல் &nbsp;மரண வழக்கிலும் செங்கார் குற்றம் &nbsp;சாட்டப்பட்ட ஒரு நபராவார். ஜாமீன் &nbsp;வழங்கும்போது இந்தத் தீவிரமான உண்மைகளை நீதிமன்றம் கவ னத்தில் கொள்ளத் தவறியது துர திர்ஷ்டவசமானது. &nbsp;தொழில்நுட்பக் காரணங்க ளால் அவர் இன்னும் விடுவிக்கப் &nbsp;படாவிட்டாலும், இந்த உத்தரவு &nbsp;நீதித்துறைக்கு ஒரு கரும்புள்ளி யாகும். மேலும், இது நீதிக்காகப் போராடும் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த வில்லை. இந்திய ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில், பெண்கள், தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன் &nbsp;முறைச் சம்பவங்கள் பன்மடங்கு &nbsp;அதிகரித்துள்ளன. குற்றஞ்சாட்டப் பட்ட கயவர்கள் மீது அரசாங்கங்கள் உறுதியான நடவடிக்கை எடுக்கத் தவறுவதும், அவர்களுக்கு மறை முகமாக ஆதரவளிப்பதும் இத்த கைய கயவர்களுக்குத் தைரிய மூட்டியுள்ளன. இது தற்போதைய ஆளும் வர்க்கத்தின் பெண்கள் மற்றும் தலித்துகளுக்கு எதிரான, &nbsp;சனாதன மனு(அ)நீதி மனப்பான் மையைப் பிரதிபலிக்கிறது&rdquo; என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கூறி யுள்ளது.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.