குலசை தசரா திருவிழா ஏற்பாடுகளை அமைச்சர்கள் ஆய்வு
6 Oct 2026, 9:43 pm

குலசை தசரா திருவிழா ஏற்பாடுகளை அமைச்சர்கள் ஆய்வு

தூத்துக்குடி,அக்.6-திருச்செந்தூர் வட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா முன்னிட்டு மேற்கொண்டுள்ள முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ் அவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், தூத்துக்குடி மாவட்டம் குலசை முத்தாரம்மன் கோவில் திருவிழாவுக்கான முன்னேற்பாடு பணிகளை ஆய்வு மேற்கொண்டுஉள்ளோம். குறிப்பாக பக்தர்களின் பாதுகாப்பு, பக்தர்கள் வரும் வழி, வெளியேறும் வழி மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், தற்காலிக பேருந்து நிலையம், வாகன நிற்கும் இடம், கடற்கரைப் பகுதிஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டுள்ளோம்.திருவிழா நடைபெறுவதற்கு முன் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் நிவர்த்தி செய்து சிறப்பான முறையில் திருவிழா நடைபெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.