மணிப்பூரில் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு குக்கி-ஜோ கவுன்சில் கடும் எதிர்ப்பு
yesterday

மணிப்பூரில் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு குக்கி-ஜோ கவுன்சில் கடும் எதிர்ப்பு

இம்பால்வன்முறையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு தேசியகுடிமக்கள் பதிவேட்டை (என்ஆர்சி) அமல்படுத்தி, சட்டவிரோதமாகக் குடியேறியவர்களைக் கண்டறிய வேண்டும் என்பதுமெய்டெய், நாகா, பாங்கால் உள்ளிட்ட சமூகங்கள், மாணவ அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. மேலும் இந்த கோரிக்கையை முன்வைத்து மணிப்பூரில் முழு அடைப்பு மற்றும் தொடர் போராட்டங்கள்நடைபெற்றன. இதனால் கடந்த வாரம் மணிப்பூரில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டன. கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. அதே சமயம்மணிப்பூர் பாஜக அரசும் என்ஆர்சிகோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. மணிப்பூர் முதலமைச்சர் யும்னம் கெமச்சந்த் சிங்,”செப்டம்பர் 2ஆம் தேதி தொடங்கும் சட்டமன்றக் கூட்டத் தொடரில் என்ஆர்சி கோரிக்கை தொடர்பாக விவாதிக்கப்படும்” என்று கூறினார்.இந்நிலையில், மணிப்பூரில் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) தொடர்பான கணக்கெடுப்பிற்கு குக்கி-ஜோ கவுன்சில் கடும்எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக குக்கி-ஜோ கவுன்சில் தலைமை செயலாளர் கின்சா வுல்சொங் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“மணிப்பூரில் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு முன்பு என்ஆர்சி-யை நிராகரிக்கிறோம். என்ஆர்சி என்பது ஒருதேசிய அளவிலான செயல்முறை.அதனால் எந்தவொரு சமூகமோ அல்லது மாநில அரசோ தனதுசொந்த விருப்பத்தின் பேரில் தனிப்பட்ட முறையில் என்ஆர்சி-ஐத் தன்னிச்சையாகத் தொடங்கவோ அல்லது நடத்தவோ முடியாது. அதே போல மணிப்பூரை அடிப்படையாகக் கொண்ட எந்தவொரு குழுவுக்கோ அல்லது மாநில அரசுக்கோ என்ஆர்சி செயல்முறையின் நேரம் அல்லதுஅதன் செயலாக்கத்தைக் கட்டளையிட எந்தவொரு சட்டப்பூர்வமான அடிப்படையுமில்லை என்பதை தெளிவுபடுத்துகிறோம்.

அசாம்1985ஆம் ஆண்டு அசாம் ஒப்பந்தத்தின்படி நடத்தப்பட்ட, அசாம் என்ஆர்சி இறுதிப் பட்டியலிலிருந்து சுமார் 19 லட்சம் மக்களை வெளியேற்றியதுடன், வெளிநாட்டவர் தீர்ப்பாயங்கள் முன்பு நிலுவையில் உள்ள மேல்முறையீடுகள் சட்டரீதியாக தீர்வு காண முடியாமல் போனது. மணிப்பூரிலும் இப்படி ஒரு நிலைமை ஆகக் கூடாது என்பதில் நாங்கள்,உறுதியாக உள்ளோம். எனவே,மணிப்பூரில் மக்கள் தொகை கணக்கெடுப்பு எந்தத் தடையுமின்றி தொடர அனுமதிக்க வேண்டும். அதே போல என்ஆர்சி மீதான ஒன்றிய அரசின்அதிகாரத்திற்கு மணிப்பூர் அரசு மதிப்பளிக்க வேண்டும். மக்கள்தொகை சிக்கல்களை வகுப்புவாத பிரச்சாரத்திற்கான அல்லது ஒடுக்குமுறைகளுக்கான கருவிகளாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்”என குக்கி-ஜோ கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.