தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

செயல் அலுவலரை கண்டித்து கவுன்சிலர் தர்ணா

4 hours before
செயல் அலுவலரை கண்டித்து கவுன்சிலர் தர்ணா
<p><strong>செயல் அலுவலரை கண்டித்து கவுன்சிலர் தர்ணா</strong></p><p>ஈரோடு, நவ.13-ஒருமையில் பேசி, மிரட்டிய பேரூராட்சி செயல் அலுவலரை கண்டித்து, கூகலூர் பேரூராட்சி பெண் கவுன்சிலர்,தனது கணவருடன் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூகலூர் பேரூராட்சி, 15 ஆவது வார்டு கவுன்சிலராக லீலாவதி என்பவர் உள்ளார். இவரது வார்டில் 7க்கும் மேற்பட்ட குறுக்கு வீதிகளில் உள்ள சேதமடைந்துள்ள கழிவுநீர் வடிகால்களால், மழைக்காலங்களில் மழைநீருடன் கழிவுநீர் கலந்துவீதிகளில் செல்வதால் குடியிருப்புவாசிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே, வடிகால்களை சீரமைக்க வலியுறுத்தி பேரூராட்சி மன்ற கூட்டங்களில் கவுன்சிலர் லீலாவதி வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால், பேரூராட்சிநிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், முதல்வரின் தனிப்பிரிவுக்கும் பேரூராட்சிகள் துறை உதவிஇயக்குநருக்கும் மனு அளித்திருந்தார். இம்மனு மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு ஆய்வறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என பேரூராட்சித்துறை அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில், கூகலூர் பேரூராட்சிக்கு வளர்ச்சித்திட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதை அறிந்த கவுன்சிலர் லீலாவதி, தனது கணவருடன் வந்து தனது வார்டில் வடிகால் வசதியை ஏற்படுத்தக் கோரி பேரூராட்சி செயல் அலுவலர் சரவணனிடம் மனு அளிக்க முயன்றுள்ளார். அப்போது செயல் அலுவலர்சரவணன், லீலாவதியை ஒருமையிலும், மிரட்டல் தொணியிலும் பேசியதாககூறப்படுகிறது.</p><p>இதனைக்கண்டித்து லீலாவதி, கணவர் பாஸ்கருடன் பேரூராட்சி அலுவலகத்தில் வியாழனன்று தர்ணாவில் ஈடுபட்டார். இதையடுத்து, பேரூராட்சித்துறை உதவி இயக்குநர், செயல் அலுவலர் உள்ளிட்டோர் கவுன்சிலர் லீலாவதியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் சாக்கடை வடிகால் வசதி ஏற்படுத்திதருவதாக உறுதி அளித்து கடிதம் வழங்கியதால், லீலாவதி தர்ணாவை கைவிட்டார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.