தங்கச்சங்கிலியை கண்டறிந்து பெண்ணிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர்களுக்குப் பாராட்டு
23 Jan 2026, 5:49 pm
<p><strong>தங்கச்சங்கிலியை கண்டறிந்து பெண்ணிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர்களுக்குப் பாராட்டு</strong></p>
<p>திருப்பூர், ஜன. 23 – திருப்பூரில் குப்பையில் மூன்றே கால் பவுன் தங்கச் சங்கிலியைக் கண்டெடுத்த தூய்மைப் பணியாளர்கள் அதை சம்பந்தப்பட்ட உரி மையாளரிடம் ஒப்படைத்த னர். தூய்மைப் பணியாளர்க ளின் நேர்மையான செயல் பாட்டை மாநகராட்சி ஆணை யர் எம்.பி.அமித் பாராட்டி னார். திருப்பூர் மாநகராட்சி 24 ஆவது வார்டு இ.பி. காலனி மூன்றாவது வீதியைச் சேர்ந்தவர் சித்ரா. இவரது வீட்டில் கடந்த வியாழனன்று சேகரிக்கப்பட்ட குப் பையை தூய்மைப் பணியாளர்கள் கருப் பாள், எல்லம்மா ஆகியோர் தரம் பிரித்தனர். இதில் மூன்றே கால் பவுன் தங்கச் சங்கிலி இருந்ததைக் கண்டறிந்தனர். இதை 24ஆவது வார்டு மாமன்ற உறுப் பினர் ஆர்.நாகராஜ் முன்னிலையில் தூய் மைப் பணியாளர்கள் கருப்பாள், எல்லம்மா இருவரும், இதன் உரிமையாளர் சித்ராவிடம் ஒப்படைத்தனர். சுகாதார ஆய்வாளர் அருண் பாண்டியன், இளநிலைப் பொறியாளர் ஹக்கீம் ஆகியோர் உடனிருந்தனர். தங்கத்தின் விலை வரலாறு காணாத அள வுக்கு உயர்ந்து வரும் நிலையில் குப்பை யில் கிடைத்த தங்கச்சங்கிலியை எவ்வித தயக்கமும் இன்றி, நேர்மையாக உரிமையா ளரிடம் ஒப்படைத்த செயலை அறிந்த மாநக ராட்சி ஆணையர் எம்.பி.அமித் இருவரையும் நேரில் அழைத்துப் பாராட்டி வாழ்த்துத் தெரி வித்தார். அத்துடன், குப்பையைத் தரம் பிரிப்பதால் இதுபோல் விலை மதிப்புள்ள பொருட்களை தவறவிட்டாலும் கண்டறிய முடிவதால், பொது மக்கள் குப்பையைத் தரம் பிரித்து தரு மாறு மாநகராட்சி சார்பில் ஆணையர் எம்.பி. அமித் கேட்டுக் கொண்டிருக்கிறார்.</p>
