தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

குடவாசல் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை கல்லூரி முதல்வர் அறிவிப்பு

15 May 2026, 10:57 pm
குடவாசல் அரசு கலை, அறிவியல்  கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை கல்லூரி முதல்வர் அறிவிப்பு

குடவாசல் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை கல்லூரி முதல்வர் அறிவிப்பு

​​​​​​​திருவாரூர், மே 15- திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே, செல்லூரில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டு –இளநிலை மாணாக்கர் சேர்க்கை நடைபெறுகிறது.

குடவாசல், செல்லூரில் புதிய கட்டடத்தில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.ஏ தமிழ், பி.ஏ ஆங்கிலம், பி.காம் வணிகவியல், பி.எஸ்.சி கணினி அறிவியல் மற்றும் பி.எஸ்.சி கணிதம் ஆகிய ஐந்து இள நிலைப் பாடப்பிரிவுகளுக்கு 2026-27 ஆம் கல்வியாண்டிற்கான இணைய வழி விண்ணப்பங்களுக்கான பதிவு மே 7 முதல் மே 29 வரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இக்கல்லூரிக்கு விண்ணப்பதாரர்கள் https://www.tngasa.in/ என்ற இணைய தள முகவரியில் விண்ணப்பிப்பதற்கான கல்லூரி எண் (College Code): 1051011 ஆகும்.

இக்கல்லூரியில் மேற்காணும் பாடப்பிரிவுகளில் சேர்க்கை பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் இணைய வழியில் விண்ணப்பிக்க மாணவர் சேர்க்கை உதவி மையம் (AFC) ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கல்லூரியில் நேரில் வந்து விண்ணப்பிக்க விரும்புவோர் உரிய ஆவணங்களுடன் இதர பிரிவினர் (OC) பிற்படுத்தப்பட்டோர், (BC) மிகவும் பிற்படுத்தப்பட்ட (MBC) பிரிவினர் ஆகியோருக்கு ரூ.50 கட்டணமாக செலுத்தி ஐந்து கல்லூரி களுக்கும், ரூ.100 செலுத்தி 10 கல்லூரிகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.

SC/ST பிரிவினர் பதிவு கட்டணம் ரூ.2 செலுத்தி ஐந்து கல்லூரிகளுக்கும், ரூ.4 செலுத்தி 10 கல்லூரிகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு கீழ்காணும் மாணவர் சேர்க்கை குழு உறுப்பினர்கள் மற்றும் கல்லூரி அலுவலகத்தை நேரில் அணுகுமாறு கல்லூரி முதல்வர் முனைவர் இரா.பசுபதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

கல்லூரி அலுவலகத் தொலைபேசி எண் : 04366-263399.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.