முந்தய பக்கம்

கூடங்குளத்தில் ஐந்தாவது அலகு உலை அழுத்த கலன் நிறுவப்பட்டது

16 Jun 2026, 9:26 pm
கூடங்குளத்தில் ஐந்தாவது அலகு உலை அழுத்த கலன் நிறுவப்பட்டது
<p><strong>கூடங்குளத்தில் ஐந்தாவது அலகு உலை அழுத்த கலன் நிறுவப்பட்டது</strong></p><p>திருநெல்வேலி, ஜூன் 16- நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் திட்டத்தின் 5-வது அலகு, உலை அழுத்தக் கலனை இந்திய அணுசக்தி கழகம் (NPCIL) வெற்றிகரமாக நிறுவி யதன் மூலம் ஒரு முக்கிய கட்டுமான மைல்கல்லை எட்டியுள்ளது. </p><p>கூடங்குளம் வளாகம், தலா 1,000 மெகாவாட் திறன் கொண்ட ஆறு அலகுகளை உள்ளடக்கியுள்ளது. ஒட்டு மொத்தமாக சுமார் 130 பில்லியன் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்து, சுற்றுச்சூழலில் சுமார் 112 மில்லியன் டன்கள் அளவான கரியமில வாயு வெளியேற்றத்தைத் தடுத் துள்ளன. திட்டங்கள் நிறைவடைந்தவுடன், கூடங்குளம் வளாகத்தின் மொத்த நிறுவப்பட்ட திறன் 6000 மெகா வாட்டாக இருக்கும். விக்சித் பாரத் அணுசக்தித் திட்டத்தி ற்கு இணங்க, இந்தியாவின் தூய்மையான எரிசக்தி இலக்குகளை அடைவதை நோக்கி முன்னேறும் அதே வேளையில், அணுசக்திப் பாதுகாப்பு, தரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றின் மிக உயர்ந்த தரநிலைகளைப் பேணுவதற்கான தனது உறுதிப்பாட்டை NPCIL மீண்டும் வலியுறுத்துகிறது. இத் தகவலை கூடங்குளம் அணுமின் நிலையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram