முந்தய பக்கம்

தனியார் கல்லூரியில் முப்பெரும் விழா

13 Jul 2026, 1:59 am
தனியார் கல்லூரியில் முப்பெரும் விழா
<p><strong>தனியார் கல்லூரியில் முப்பெரும் விழா</strong></p><p>​​​​​​​நாமக்கல், ஜூலை 12- கே.எஸ்.ஆர். மகளிர் கலை அறிவியல் கல்லூரி யில் மன்றங்கள், அமைப்புகள் மற்றும் சங்கங்களின் துவக்க விழா நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, கே.எஸ். ஆர். மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மன்றங் கள், அமைப்புகள் மற்றும் சங்கங்களின் துவக்க விழா சனியன்று நடைபெற்றது. மாணவி ஜி.ஆர். ஆஷிகா வரவேற்றார். கல்லூரியின் முதல்வர் எம். கார்த்திகேயன் வாழ்த்திப் பேசினார். இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக தமிழ்த்துறை உதவிப் பேராசிரி யர் நா.சங்கரராமன் “கனவுகள் தான் வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும்” என்ற டாக்டர் ஏ.பி. ஜே.அப்துல்கலாமின் பொன்மொழிகளை நினைவு கூர்ந்தார். இவ்விழாவில் மாணவப் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு மன்றங்களின் உறுப்பினர்கள் கௌரவிக்கப்பட்டனர். முடிவில், மாணவி சௌமியா நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram