தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மாற்றுத்திறன் வீரர்களின் நம்பிக்கை நட்சத்திரம்!

24 May 2026, 9:22 pm
மாற்றுத்திறன் வீரர்களின் நம்பிக்கை நட்சத்திரம்!

மாற்றுத்திறன் வீரர்களின் நம்பிக்கை நட்சத்திரம்!

மனித வாழ்வில் சவால்கள் என்ப வை எழுச்சிக்கான படிக்கற் கள் என்பதை நிரூபிக்கி றது. வாழ்ந்து காட்டும் உதா ரணங்கள் அரிதானவை.

ஆனால், கர்நாடகாவின் மண்டியா மாவட்டம், கொப்பா கிராமத்தில் 1959 ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி பிறந்த கே.எஸ்.ராஜ ண்ணா அந்த அரிய மனிதர் களில் ஒருவர்.

இன்று அவர் வெறும் உயிர் மூச்சுடன் வாழ்ந்து கொண்டிருப்பவர் அல்ல.

மாறாக, நூற்றுக் கணக்கான மாற்றுத்திற னாளிகளின் வாழ்வில் வெளிச்சம் ஏற்றி, சமூகத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக மிளிர்ந்து கொண்டிருக் கிறார்.

குழந்தைப் பருவத்தின் கொடூர சோதனை! 11 வயதில் ராஜண்ணா வின் வாழ்வில் பேரிடி வந்து சேர்ந்தது.

இளம்பிள்ளை வாதம் என்னும் போலியோ நோய் அவரது உடலைத் தாக்கியது.

கைகளையும் கால் களையும் பயன்படுத்தும் சக்தியை அது முற்றிலும் பறித்து விட்டது.

சாதாரண குழந்தைகள் விளையாடி ஓடிக்கொண்டிருந்த வய தில், ராஜண்ணாவோ தனது உடலின் அடிப்படை இயக்கங் களையே இழந்து நின்றார்.

ஆனால், அவரது இத யத்தில் எரிந்த வெற்றி வேட்கையின் தீயை அணைக்க அந்த நோயால் முடியவில்லை.

தோல்வி யை ஏற்க மறுத்த அந்த இளம் உள்ளம், முழங்கா லில் நடக்கக் கற்றுக்கொண் டது.

அது வெறும் நடை அல்ல, வாழ்க்கையை வெல்வதற்கான முதல் படி.

எதிர்காலத்தை வடிவமைத்த கல்வி உடல் ஊனம் கல்வியறி வுக்கு தடையாக இருக்க முடி யாது என்பதை ராஜண்ணா தனது செயல்களால் நிரூ பித்தார்.

எஸ்எஸ்எல்சி படிப்பை முடித்த அவர், இயந்திர பொறியியலில் டிப்ளமோ பட்டம் பெற்றுள் ளார்.

எழுதுதல், நடத்தல், ஓடுதல், நீந்துதல், நீரில் மிதத்தல், நான்கு சக்கர வாக னம் ஓட்டுதல் என இயலா மையின் சாத்தியங்களை மறுக்கும் ஒரு வாழும் புராண மாக மாறியது.

கலைத் திறமையும் சமூகப் பணியும் விளையாட்டு மட்டு மல்ல, கலைத்துறையிலும் ராஜண்ணா தனித்துவமான முத்திரை பதித்திருக்கிறார்.

1971-72ஆம் ஆண்டு கர்நா டக மாநில அளவிலான ஓவி யப் போட்டியில் முதல் பரிசு பெற்றுள்ளார்.

1980ஆம் ஆண்டில் சுய தொழில் திட்டத் தின் கீழ் ‘ஷைன் டிசேபிள்ட் இண்டஸ்ட்ரீஸ்’ என்ற நிறு வனத்தை நிறுவியவர், இந்த நிறுவனத்தில் ஐநூறுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி களுக்கு வேலைவாய்ப்பு அளித்திருக்கிறார்.

ஆயிரக் கணக்கான ஏழை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளித்து, அரசாங்க நலத் திட்டங்களைப் பெற வழி காட்டியாக இருந்துள்ளார்.

சுயதொழில் தொடங்கவும், கண்ணியமான வாழ்க்கை வாழவும் உறுதுணையாக நின்றார்.

பாராலிம்பிக் மேடையில் தேசத்தின் பெருமை 2002ஆம் ஆண்டு மலேசி யாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற சர்வதேச பாரா லிம்பிக் போட்டிகளில் இந்தி யாவைப் பிரதிநிதித்துவப் படுத்தினார்.

வட்டு எறிதலில் தங்கப் பதக்கமும், நீச்சலில் வெள்ளிப் பதக்கமும் வென்று நாட்டுக்குப் பெரு மை சேர்த்தார்.

அவரது விளை யாட்டுத் திறமை சர்வதேச அரங்கில் இந்தியக் கொடி யை உயர்த்தியது மட்டு மல்ல, மாற்றுத்திறனாளி களின் வலிமையை உல குக்கு உணர்த்தியது.

நிர்வாகத்திலும் சமூக நீதியிலும் முன்னோடி கர்நாடக மாநிலத்தில் மாற்றுத்திறனாளிகளுக் கான ஆணையராக பணி யாற்றிய முதல் மாற்றுத்திற னாளி ராஜண்ணா தான்.

அவ ரது முயற்சிகள் மாநிலம் முழுவதும் மாற்றுத்திற னாளிகளுக்கு உகந்த சூழலை உருவாக்கி, அவர் களது வாழ்க்கைத் தரத்தை கணிசமாக மேம்படுத்தியது.

விருதுகளும் சாதனைகளும் ராஜண்ணாவின் பங்களி ப்புகள் பல விருதுகளாலும் கவுரவங்களாலும் அங்கீக ரிக்கப்பட்டுள்ளன.

2003ஆம் ஆண்டு இந்திய அரசு, மாற்றுத்திறனாளிகளின் நல னுக்கான தேசிய விருதை வழங்கியது.

2020ஆம் ஆண்டு கன்னட ராஜ்யோத் சவ விருதையும், 2000ஆம் ஆண்டு சமூகப் பணி மற்றும் தொழிலதிபருக்கான மாநில விருதையும் கர்நாடக அரசு வழங்கியது.

2003இல் பெங்களூரு மகாநகர பாலிகே விளையாட்டுத் துறைக்கான கெம்பேகௌ டா விருதையும், 2014இல் கர்நாடக விஸ்வகர்மா ரத்னா விருதையும் பெற்றார்.

2016ஆம் ஆண்டு கோகோ கோலா இந்தியா மற்றும் தென்மேற்கு ஆசியா வின் லிம்கா புத்தக சாத னையில் அவரது பெயர் பதிவு செய்யப்பட்டது.

2017இல் இந்தியன் விர்ச்சுவல் யுனிவர்சிட்டி பார் பீஸ் அண்ட் எஜுகேஷன் கௌரவ முனைவர் பட்டம் வழங்கியது.

2023இல் அகில பாரத கன்னட சாகித்ய பரிஷத் கௌரவ விருது வழங்கியது.

இவை அனைத்தையும் தாண்டி, 2024ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் தேதி இந்தி யக் குடியரசுத் தலைவர் திரௌ பதி முர்மு அவர்களிட மிருந்து பத்மஸ்ரீ விருது பெற்றது அவரது வாழ்வின் உச்சக்கட்ட அங்கீகாரமாக அமைந்தது. -சி.ஸ்ரீராமுலு

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.