போராளி கே.எஸ்.கருப்பசாமி-யின் நினைவு தினம் அனுசரிப்பு
8 Oct 2026, 2:44 am

போராளி கே.எஸ்.கருப்பசாமி-யின் நினைவு தினம் அனுசரிப்பு

திருப்பூர், அக்.7-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், தொழிலாளி வர்க்கத்தின் வீரம் மிக்க களப் போராளி தோழர் ‘கே.எஸ்.கே’ என்றழைக்கப்படும் கே.எஸ்.கருப்பசாமியின் 17ஆம் ஆண்டு நினைவு தினம் புதனன்று கடைப்பிடிக்கப்பட்டது.

திருப்பூர் தியாகி பழனிசாமி நிலையம் முன்பு நடைபெற்ற கே.எஸ்.கே. நினைவு தின நிகழ்ச்சிக்கு, சிஐடியு மாவட்டத் தலைவர் ஜி.சம்பத் தலைமை ஏற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.மூர்த்தி, கே.எஸ்.கே. பணிகளை நினைவுகூர்ந்து உரையாற்றினார். இதைத்தொடர்ந்து மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் உள்ளிட்ட திரளானோர் மலரஞ்சலி செலுத்தினர்.அதேபோல், அனுப்பர்பாளையம் முதலாவது மண்டல அலுவலகம் முன்பு நடைபெற்ற, நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கு, பாத்திரத் தொழிலாளர் சங்க செயலாளர் கே.

குப்புசாமி தலைமை ஏற்றார். இதில், சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ், மார்க்சிஸ்ட் கட்சியின் முதலாவது மேற்கு மண்டலச் செயலாளர் ச.நந்தகோபால், மாவட்டக்குழு உறுப்பினர் பி.ஆர்.கணேசன் ஆகியோர் கே.எஸ்.கே. பணிகளை நினைவு கூர்ந்து உரையாற்றினர். இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

அவிநாசி

இதேபோன்று, மார்க்சிஸ்ட் கட்சியின் வஞ்சிபாளையம் பகுதி கிளை அலுவலகம் முன்பு, நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில், கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் முருகன், மாதர் சங்க ஒன்றிய நிர்வாகி தங்கமணி, மூத்த தோழர் மிலிட்டரி பொன்னுச்சாமி, கிளைச் செயலாளர் ஹனிபா உள்ளிட்டோர்பங்கேற்றனர்.