தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கிருஷ்ணராயபுரம் திமுக வேட்பாளர் சி.கே.ராஜாவிற்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

2 Apr 2026, 3:50 pm
கிருஷ்ணராயபுரம் திமுக வேட்பாளர்  சி.கே.ராஜாவிற்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு
<p><strong>கிருஷ்ணராயபுரம் திமுக வேட்பாளர் &nbsp;சி.கே.ராஜாவிற்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு</strong></p> <p>கரூர், ஏப். 2- &nbsp;மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில், கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் சி.கே.ராஜா வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர் கிருஷ்ணராயபுரம் தொகுதிக்கு உட்பட்ட காக்கவாடி, பாகநத்தம், கடவூர், மாவத்தூர், தரகம்பட்டி ஊராட்சி&zwnj;களில், பொதுமக்களை சந்தித்து, உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். &nbsp;தான் வெற்றி பெற்றதும் தங்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற பணியாற்றுவேன் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு மீண்டும் 2 ஆவது முறையாக ஆட்சி பொறுப்பேற்ற உடன், அரசு அறிவித்துள்ள திட்டங்களை பொதுமக்களுக்கு விரைந்து பெற்று கொடுத்திட பணியாற்றுவேன் என்று அவர் பேசினார். &nbsp;வேட்பாளர் சி.கே.ராஜாவிற்கு பொதுமக்கள் மலர் தூவி உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். &nbsp;சிபிஎம் மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சக்திவேல், சிபிஎம் கிருஷ்ணராயபுரம் தேர்தல் பொறுப்பாளர் பி.ராமமூர்த்தி, ஒன்றியச் செயலாளர் பி. பழனிவேல், திமுக கடவூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.கே. சுதாகர், துணைச் செயலாளர் கே. குமரேசன், மாவட்ட பிரதிநிதி ஆர். செந்தில்மோகன், விசிக கிருஷ்ணராயபுரம் தொகுதி மாவட்டச் செயலாளர் மரு.அவிநாசி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.