தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கார்ப்பரேட் பெருமுதலாளிகளின் கொள்ளைக்களமாக மாறிய சுங்கச்சாவடிகள் - லெனின் முருகன்

3 Jul 2026, 8:26 pm
கார்ப்பரேட் பெருமுதலாளிகளின் கொள்ளைக்களமாக மாறிய சுங்கச்சாவடிகள் - லெனின் முருகன்

கார்ப்பரேட் பெருமுதலாளிகளின் கொள்ளைக்களமாக மாறிய சுங்கச்சாவடிகள் - லெனின் முருகன்

மக்களின் வரிப் பணத்தில் கட்டமைக்கப்படும் தேசிய நெடுஞ்சாலைகள், தடை யற்ற போக்குவரத்தையும் சமத்துவமான பொருளா தாரப் பரிமாற்றத்தையும் உறுதி செய்ய வேண்டி யவை. ஆனால், நவ தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாக, பொதுக் கட்டமைப்புகள் அனைத்தும் கார்ப்பரேட் பெருநிறுவனங்களின் லாப வேட்டைக்காகத் தாரைவார்க்கப்படுகின்றன.

ஒன்றிய பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு, பொதுத்துறை நிறுவனங்களை விற்பதும், தேசிய நெடுஞ்சாலைகளைத் தனியாருக்குக் குத்த கைக்கு விடுவதும் மிகத் தீவிரமான மக்கள் விரோதச் செயலாக மாறியுள்ளது.இதன் மிகக் கொடூரமான வடிவத்தை விசித்திரமான கட்ட மைப்பு ரீதியான சுரண்டலாகத் தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்ட தேசிய நெடுஞ்சாலை 44-இல் (முன்பு என்எச்-7) உள்ள சுங்கச்சாவடியில் காண முடிகிறது.

ஜனநாயக உரிமைகளுக்கும் இலவச மருத்துவத்திற்கும் விதிக்கப்படும் மறைமுக வரி கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தலைமைச் செய லகமாக விளங்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகியவை இதே தேசிய நெடுஞ்சாலையில்தான் அமைந்துள்ளன. சாமானியக் குடிமக்கள் மாவட்டத்தின் ஆட்சியரைச் சந்தித்து குறையைச் சொல்வதற்குக் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டிய அவலநிலை நீடிக்கிறது.

இது இந்திய அரசமைப்புச் சட்டம் பிரிவு 19 மற்றும் 21 வழங்கும் அடிப்படை உரிமைகளை நேரடியாகப் பறிக்கும் ஜனநாயக விரோதச் செயலாகும்.

மேலும், கிருஷ்ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போலுப்பள்ளியில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏழை நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

விபத்து மற்றும் அவசரச் சிகிச்சைப் பிரிவுக்கு வரும் நோயாளிகள், ஒவ்வொரு நிமிடமும் உயிருக்குப் போராடும் நிலையில், சுங்கச்சாவடியில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய துயரமும் அரங்கேறுகிறது. இலவச மருத்துவ சேவையைப் பெறுவதற்காகச் செல்லும் ஏழை நோயாளிகள் மீது சுமத்தப்படும் இந்தச் சுங்கக் கட்டணம், ‘இலவச மருத்துவம்’ என்ற கோட்பாட்டையே கேலிக்கூத்தாக்கி அதன் மீது ஒரு மறைமுக வரியை வன்முறையாக விதிக்கிறது.

மாற்றுச் சாலைகளின் அழிவும் பிஓடி முறை ஊழல்களும் தேசிய நெடுஞ்சாலையில் பல நூறு ரூபாய் சுங்கக் கட்டணம் செலுத்துவதைத் தவிர்ப்ப தற்காக, கனரக வாகனங்கள் கிருஷ்ணகிரி நகரை இணைக்கும் குறுகிய ‘சின்னமேலுப்பள்ளி சாலை’ வழியே சட்டவிரோதமாகச் செல்கின்றன. இதனால் இச்சாலை முற்றிலும் சிதைந்து, பெரிய பள்ளங்களுடன் ஒரு ‘மரணக் குழியாக’ மாறியுள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளாக இச்சாலையைச் சீரமைக்க மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை

. பொதுவாகச் சுங்கச்சாவடிகள் பிஓடி (Build-Operate-Transfer) முறையில் தனியார் நிறுவனங்களின் முதலீட்டில் அமைக்கப்பட்டு, 15 முதல் 30 ஆண்டுகளுக்குச் சுங்கக் கட்டணம் வசூலித்துக் கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. இம்முறையில் திட்ட மதிப்பை போலியாக உயர்த்தி பொதுத்துறை வங்கிகளில் பல நூறு கோடிகளைக் கடனாகப் பெற்று ஏமாற்றுவது கார்ப்பரேட்டுகளின் தந்திரமாகும்.

உதாரணத்திற்கு, கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியை நிர்வகித்த ரிலையன்ஸ் நிறு வனத்தின் கிளை நிறுவனமான எச்கே டோல் ரோடு பிரைவேட் லிமிடெட் (‘HK Toll Road Private Limited’), கனரா வங்கி உள்ளிட்ட வங்கிகளில் வாங்கிய ரூ.282.59 கோடி கடனைத் திருப்பிச் செலுத்தாமல் மிகப்பெரும் நிதி மோசடி செய்த தால், தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயம் (NCLT) அதன் மீது தற்போது திவால் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.

சட்டப்படி ஒப்பந்தக் காலம் முடிந்த பிறகு சுங்கக் கட்டணம் 40 சதவீதமாகக் குறைக்கப்பட வேண்டும். ஆனால், ஒன்றிய பாஜக அரசு அக்டோ பர் 6, 2023 அன்று இந்த விதியில் மக்கள் விரோதத் திருத்தத்தைக் கொண்டு வந்து, எவ்விதத் தள்ளு படியுமின்றி முழு கட்டணத்தையே நிரந்தரமாக வசூலித்துக் கொள்ளலாம் எனச் சட்டப்பூர்வ பகல் கொள்ளைக்கு வழிவகுத்துள்ளது. சிஏஜி அறிக்கை அம்பலப்படுத்திய “பாஜக மாடல் ஊழல்” சுங்கச்சாவடிகளை நிர்வகிக்கும் நிறுவனங்கள் செய்யும் பெரும் ஊழல்களை இந்தியக் கணக் காய்வு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவரின் அறிக்கை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. விதிமுறைகளை மீறி, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) மட்டும் மக்களிடம் இருந்து சுமார் 154 கோடி ரூபாயைச் சட்டவிரோதமாகச் சுருட்டியுள்ளது.

தமிழ்நாட்டின் பரனூர் சுங்கச்சாவடியில் 1954-இல் கட்டப்பட்ட ஒரு பழைய பாலத்திற்கும் சேர்த்து சுங்கம் வசூலித்து 22 கோடி ரூபாயைக் கொள்ளையடித்துள்ளனர். பரனூர் சுங்கச்சாவடியில் மட்டும் சுமார் 53% வாகனங்கள் விஐபி-க்கள் என்ற பெயரில் கட்டணமில்லாமல் இலவசமாக அனுமதிக்கப் பட்டதைச் சுட்டிக்காட்டிய மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், இதுவே உண்மை யான “பாஜக மாடல் ஊழல்” என ஆணித்தரமாக அம்பலப்படுத்தினார்.

மேலும், இரண்டு சுங்கச்சாவடிகளுக்கு இடையே குறைந்தபட்சம் 60 கி.மீ தூரம் இருக்க வேண்டும், நகராட்சி எல்லையிலிருந்து 10 கி.மீ தொலைவிற்கு அப்பால் அமைய வேண்டும், 100 மீட்டருக்கு மேல் வாகனங்கள் அணிவகுத்தால் கட்டணமின்றி இலவசமாக அனுமதிக்க வேண்டும் என்ற தேசிய நெடுஞ்சாலை ஆணைய விதிகள் அனைத்தும் கிருஷ்ணகிரியில் அப்பட்ட மாக மீறப்பட்டுள்ளன. சமரசமற்ற போராட்டம் கிருஷ்ணகிரி மக்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும் இந்த மக்கள் விரோதச் சுங்கச்சாவடிக்கு எதிராக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாபெரும் முற்றுகைப் போராட்டம் ஜூலை 3 அன்று கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் நடைபெற்றுள்ளது.

1. பொதுமக்களுக்குக் கடும் இடையூறாக உள்ள இச்சுங்கச்சாவடியை உடனடியாக அகற்ற வேண்டும். ஏற்கெனவே திட்டமிட்டபடி சின்னாறு பகுதிக்கு இதனை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும்.

2.சுங்கச்சாவடி இடமாற்றம் செய்யப்படும் வரை, போலுப்பள்ளி அரசு மருத்துவமனைக்குச் செல்லும் ஏழை நோயாளிகளின் வாகனங் களுக்கு முழுமையான கட்டண விலக்கு அளிக்க வேண்டும்; போதிய நகரப் பேருந்து வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

3.கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த உள்ளூர் பதிவு எண் கொண்ட அனைத்து வாக னங்களுக்கும் (TN 24, TN 70) எவ்வித வரம்பும் இன்றி நிரந்தரக் கட்டண விலக்கு அளிக்கப்பட வேண்டும்.

4.கடந்த ஏழு ஆண்டுகால அலட்சியத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, கனரக வாகனங்களால் முழுமையாகச் சிதைக்கப்பட்டுள்ள சின்னமேலுப்பள்ளி கிராமப்புறச் சாலை களைப் போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி இப்போராட்டத் தின் மூலம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் ஏற்கெனவே கப்பலூர், பரனூர், இனாம்காரியந்தல், நத்தம்பட்டி ஆகிய சுங்கச்சாவடிகளுக்கு எதிராகச் சிபிஐ(எம்) நடத்திய தொடர் போராட்டங்களின் நீட்சியா கவே கிருஷ்ணகிரி முற்றுகைப் போர் நடைபெற் றுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.