டாஸ்மாக் கடை திறப்பை எதிர்த்து குடியிருப்போர், விவசாயிகள் போராட்டம் அறிவிப்பு
9 Oct 2026, 1:37 am

டாஸ்மாக் கடை திறப்பை எதிர்த்து குடியிருப்போர், விவசாயிகள் போராட்டம் அறிவிப்பு

கிருஷ்ணகிரி, அக். 8 –கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே பவர் கிரிட் மின் நிலையம் அருகில் உள்ள மருதாண்டப்பள்ளி சாலையில் அமைந்துள்ள சாம்பியன் சிட்டி குடி யிருப்பு பகுதிக்குள் புதிய டாஸ்மாக் கடை திறக்க வாடகை கட்டிடம் கட்டப்பட்டு வரு வதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உரு வாக்கப்பட்ட இக்குடியிருப்புப் பகுதியில் 25-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதுடன், அப்பகுதியில் கார்மெண்ட்ஸ் நிறுவனம், மூன்று நர்சரி பள்ளிகள், தீயணைப்பு நிலையம் மற்றும் ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. மேலும், சிப்காட் தொழிற்பூங்காவிற்குச் செல்லும் நூற்றுக்கணக்கான பெண் தொழிலாளர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தினந்தோறும் இச்சாலையைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இங்கு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டால் பொதுமக்களுக்கும், பெண் தொழிலாளர்களுக்கும் கடும் இடை யூறு ஏற்படும் என்பதால், கடையைத் தடை செய்யக் கோரி மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர், டாஸ்மாக் மாவட்ட நிர்வாகம் மற்றும் கோட்டாட்சியர் ஆகியோரிடமும், முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும் அப்பகுதி மக்கள் மனு அளித்துள்ளனர். மேலும், தொழிற்சாலை நிர்வாகத்தினரும் மாவட்ட நிர்வாகத்திடம் எதிர்ப்புத் தெரி வித்துள்ளனர். ஆனாலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், மாவட்ட நிர்வாகம் இதனைத் தடை செய்யா விட்டால் குடியிருப்போர் நல சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் இப்பகுதி மக்களுடன் இணைந்து மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் முருகேஷ் எச்சரித்துள்ளார்.