27 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய பட்டாவுக்கு வீட்டுமனை அளவீடு செய்து தரக்கோரி தீண்டாமை ஒழிப்பு முன்னணி, சிபிஎம் காத்திருப்பு போராட்டம்
12 hours before

27 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய பட்டாவுக்கு வீட்டுமனை அளவீடு செய்து தரக்கோரி தீண்டாமை ஒழிப்பு முன்னணி, சிபிஎம் காத்திருப்பு போராட்டம்

கிருஷ்ணகிரி, அக்.27 -சூளகிரி வட்டம் சாணமாவு கிராமத்தில் 27 ஆண்டுகளுக்கு முன்பு 1999 ஆம் ஆண்டு 41 பட்டியலின குடும்பங்களுக்கு தமிழக அரசால் இலவசவீட்டுமனை பட்டாக்கள் வழங்கி இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அரசு கையகப்படுத்தி பட்டியலின மக்களுக்கு வழங்கிய அந்த நிலத்திற்கு அரசு இழப்பீடு தொகை வழங்கவில்லை எனவும், நீண்ட காலமாகதங்கள் அனுபவத்தில் உள்ளதாகவும்,அதில் கரும்பு நெல் உள்ளிட்ட விவசாயம் நடைபெற்று விளைநிலமாகவும் உள்ளது எனவும் தனியார் தரப்பினர் தவறானதகவல்களை கூறி பொய் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்நிலையில் ஆதி திராவிடநலத்துறைக்கு மாவட்டத்தில் இதுவரை நிரந்தர வட்டாட்சியர் இல்லாததாலும், சில அரசு அதிகாரிகளின் தவறான செயல்பாடுகளாலும், தற்காலிகமாக இத்துறைக்கு நியமிக்கப்படுமவட்டாட்சியர்கள் இத்துடன் சேர்த்து 5,6 வட்டங்களுக்கும்,மாவட்டத்திற்கும் பொறுப்பு ஏற்பதாலும் சாக்குப் போக்கு கூறியும், நிலத்தை பிரித்துக் கொடுக்காமலும், சில நேரம் எதிர் தரப்பினருக்கு ஆதரவாக செயல்படுவது போலவும் இருந்து வந்துள்ளனர்.கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சாணமாவு பட்டியல் இனமக்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் மார்க்சிஸ்ட் கட்சியும் பல போராட்டங்களை நடத்தி வந்த நிலையில் இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட மக்களையும் இணைத்து சட்ட போராட்டமும் நடத்தி வந்தனர்.

அதன் தொடர்ச்சியாக நீதிமன்றத் தீர்ப்பின்படி பட்டியலின பயனாளிகளுக்கு இடம் பிரித்துக் கொடுக்க அரசு தரப்பில் 2022 ஆம் ஆண்டில்நிலம் அளக்கப்பட்டு கல்நடப்பட்டது.

அது சமயம் தனியார் தரப்பு நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி மீண்டும் வழக்குத் தொடுத்துள்ளது. இந்த வழக்கை விரைவு படுத்தவும் பொய்யான தகவல்கள் கூறி தனி நபர்கள் தடையாணை வாங்கியதை முறியடித்திடவும் ஆதி திராவிடநலத்துறையும் அரசும்எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மீண்டும் 2024 ஆம் ஆண்டு பயனாளிகளுக்காக பிரமாண்ட போராட்டம் நடத்தப்பட்டது.

இந்நிலையில், இன்று சாண மாவு பயனாளிகளுக்கு வீட்டு மனையை ஆதி திராவிட நலத்துறை பிரித்து வழங்கிட வேண்டுமென வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மாபெரும்காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர்ஆனந்தகுமார். மாநிலத் துணைத் தலைவர் ஜி.ஆனந்தன் தலைமைதாங்கினர். அகில இந்திய துணைத்தலைவர் சாமுவேல்ராஜ், மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சி.சுரேஷ் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.சாணமாவில் இருந்து பாதிக்கப்பட்ட பயனாளிகள் பேரணியாக வந்து காத்திருப்பு போராட்டத்திற்குநிலத்திற்குள்புகுந்த போது காவல்துறையினருக்கும் பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கும் இடையில் கடும்தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தொடர்ந்து ஆதிதிராவிட நலத்துறை வட்டாட்சியர் மாவட்ட காவல்துறையினர் அரசு அதிகாரிகள் சூளகிரி வட்டாட்சியர் உள்ளிட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தை முடிவில் வட்டாட்சியர் அரசு அதிகாரிகள் வெகு விரைவில் வழக்கை முடித்துபயனாளிகளுக்கு இடத்தை பிரித்துக் கொடுக்க கேவிட் பெட்டிஷன் உடனடியாக போட்டிட நடவடிக்கை எடுப்பதாக கூறி கடிதம் மூலம் உறுதியளித்தனர்.இதையடுத்து காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

காத்திருப்பு போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டசெயற்குழு உறுப்பினர்கள்ஆர்.சேகர், நஞ்சுண்டன்,மகாலிங்கம்,ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி,லெனின்முருகன், நடராஜன்,ஸ்ரீதர்மற்றும் இடை கமிட்டி செயலாளர்கள் ராஜா,முருகன், ஆர்.கே.தேவராஜ்,உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர் மாவட்ட பொருளாளர்சிவப்பிரகாஷ் நன்றி கூறினார்.