தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

48 ஆண்டுகளாகியும் பட்டா கிடைக்கவில்லை ஆதிதிராவிடர் குடியிருப்பில் எந்த வசதியும் இல்லைகிருஷ்ணகிரி அருகே மக்கள் அவதி

yesterday
48 ஆண்டுகளாகியும் பட்டா கிடைக்கவில்லை ஆதிதிராவிடர் குடியிருப்பில் எந்த வசதியும் இல்லைகிருஷ்ணகிரி அருகே மக்கள் அவதி

48 ஆண்டுகளாகியும் பட்டா கிடைக்கவில்லை ஆதிதிராவிடர் குடியிருப்பில் எந்த வசதியும் இல்லைகிருஷ்ணகிரி அருகே மக்கள் அவதி

கிருஷ்ணகிரி, நவ.18-கிருஷ்ணகிரி அருகே 48 ஆண்டுகளாகி யும் பட்டா கிடைக்காமல் ஆதி திராவிட மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

சூளகிரி அருகே உள்ள சாமனப்பள்ளி யில் குடியிருந்த ஆதிதிராவிடர் மக்களுக்கு 48 ஆண்டுகளுக்கு முன்பு இந்திரா நினைவு குடியிருப்பு வீடுகள் 21 கட்டிக் கொடுக்கப்பட்டது.

ஆனால் அவர்கள் குடியிருந்து வரும் வீடுகள் 30 ஆண்டுகளுக்கு மேலாக மிகவும் பழுதடைந்து வீட்டிற்குள் மேற்கூரையும் பக்க சுவர்களும் பூச்சுகள் உதிர்ந்தும் உள்ளன. இரு வீடுகளில் சிமெண்ட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இதனால் அந்தக் குடியிருப்புவாசிகள் இரவில் வீட்டுக்குள் தூங்க பயந்து வெளி யில் படுத்து உறங்கி வருகின்றனர்.

எந்த வீடுகளிலும் கழிப்பிட வசதி, குடிநீர், மின்விளக்கு வசதிகள் இல்லை. 30 ஆண்டுகளுக்கு மேலாக எந்த வீடு களிலும் மின்விளக்கு வசதி இல்லாமல் இருட்டிலேயே வாழ்கின்றனர்.

இந்த குடியிருப்பு பகுதியை அரசு அதிகாரிகளோ, கிராம நிர்வாக அதி காரிகளோ, ஊராட்சி தலைவர், எம்எல்ஏ உள்ளிட்ட யாரும் வந்து பார்த்தது கூட இல்லை.

இந்நிலையில் பாழடைந்துள்ள வீட்டை இடித்துவிட்டு புதிதாக சிறிய சிறிய வீடுகள் கட்டிக் கொள்ள நினைத்தாலும் அரசின் பட்டா இதுவரை கிடைக்காததால் பாழடைந்துள்ள வீட்டை இடித்து விட்டு கட்டுவதும் சட்டப்படி முடியாத சூழ்நிலை உள்ளது.

இதுகுறித்து அரசு அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் பலனில்லை. 48 ஆண்டுகளுக்கு மேலாகியும் பட்டாவும் கிடைக்கவில்லை.

அரசு இந்த வீடுகளை இடித்துவிட்டு புதிதாக தொகுப்பு வீடு கட்டித்தர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் சாமனப்பள்ளிஆதி திராவிட மக்கள் மனு நாளான நவ.16ம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

48 ஆண்டுகள் கடந்த சாமனப்பள்ளி ஆதி திராவிட மக்களின் இந்திரா நினைவு குடியிருப்பு திட்ட வீடுகளுக்கு பட்டா வழங்கி பாழடைந்த வீடுகளை இடித்து விட்டு தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும். அதுவரை குடிநீர், கழிப்பிடம்,மின்விளக்கு வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடி யாக செய்து தர வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் வலியுறுத்தினர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.