தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கிருஷ்ணகிரி பழைய பேருந்து நிலையத்தில் சுகாதாரச் சீர்கேடு: பயணிகள் அவதி

10 Jul 2026, 9:50 pm
கிருஷ்ணகிரி பழைய பேருந்து நிலையத்தில்  சுகாதாரச் சீர்கேடு:  பயணிகள் அவதி
<p><strong>கிருஷ்ணகிரி பழைய பேருந்து நிலையத்தில் சுகாதாரச் சீர்கேடு: பயணிகள் அவதி </strong></p><p>கிருஷ்ணகிரி, ஜூலை 10- கிருஷ்ணகிரி பழைய பேருந்து நிலையத்தில், கழிவுநீர் கால்வாய்கள் முறையாக அமைக்கப்படா ததாலும், கழிப்பறை வளாகம் சரியாகப் பரா மரிக்கப்படாததாலும் கடும் சுகாதாரச் சீர்கேடு நிலவு கிறது. சிறிய மழை பெய்தால் கூட, பேருந்து நிலையம் முழுவதும் மழைநீரும், கழிப்பறையிலிருந்து வெளியேறும் கழிவுநீரும் கலந்து குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், பயணிகள் அசுத்தமான நீரை மிதித்துச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி யுள்ளனர். பேருந்துகள் செல்லும்போது அந்த அசுத்த நீர் பயணிகள் மீது தெரிப்பதாகப் பொது மக்கள் புகார் தெரிவிக்கின்ற னர். எனவே, கழிவுநீர் தேங்கு வதைத் தடுத்து, கால்வாய் களை உடனடியாகத் தூர்வாரிச் சுகாதாரத்தை நிலைநாட்ட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செய லாளர் பெரியசாமி கோரிக்கை விடுத்துள்ளார். லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது கள்ளக்குறிச்சி,ஜூலை 10- கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் அலு வலகத்தில் பணியாற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளர் ஆரோன், பட்டா மாற்றம் செய்து தர ரூ.2,500 லஞ்சம் வாங்கிய போது கள்ளக்குறிச்சி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கினார். லஞ்சப் பணத்து டன் கையும் களவுமாக பிடிபட்ட அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.