வாஸ்து சரியில்லை என மூடிக்கிடக்கும் எம்எல்ஏ அலுவலகத்தை திறக்க வேண்டும் மாட்டிடம் மனு கொடுத்து போராட்டம்
5 Oct 2026, 1:07 am
<p><strong>வாஸ்து சரியில்லை என மூடிக்கிடக்கும் எம்எல்ஏ அலுவலகத்தை திறக்க வேண்டும் மாட்டிடம் மனு கொடுத்து போராட்டம்</strong></p><p>கிருஷ்ணகிரி,அக்.4-தவெக ஆட்சி அமைந்த பிறகு கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அருகில்உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறக்கப்படாமல் பூட்டியே உள்ளது. இதனால் பொதுமக்கள் தங்கள் குறைகளை கோரிக்கைகளை மனுவாகக்கூட கொடுக்க முடியாமலும், சட்டமன்ற உறுப்பினரை சந்திக்க முடியாத நிலையிலும் உள்ளனர்.இந்நிலையில் அரசு கட்டிக் கொடுத்துள்ள கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு மாட்டுடன்வந்த சமூக ஆர்வலர் முனைவர் சந்திரமோகன் பூட்டியே இருக்கும் எம்எல்ஏ அலுவலக கதவில் மாட்டை கட்டிமாட்டிடம் மனு கொடுத்தார்.இது குறித்து அவர் கூறியதாவது: இந்த சட்டமன்றஅலுவலகம் திறக்கப்படாமல், பயன்பாட்டுக்கும் வராமல் பூட்டியே கிடக்கிறது. கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் அரசுகொடுத்துள்ள அலுவலகத்துக்கு வராததால் பொதுமக்கள் பலரும் தங்கள் குறைகளை கோரிக்கைகளை சட்டமன்ற உறுப்பினரிடம் மனுவாக கூட கொடுக்க முடியாத நிலையில் உள்ளனர்.வாஸ்து சரியில்லை என்பதற்காக இந்த அலுவலகம் திறக்கப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது. அப்படி என்றால்அலுவலகத்தை இடித்துவிட்டு வாஸ்துபடி புதிதாகஅலுவலகத்தை கட்டிக் கொள்ள வேண்டும். அதைவிடுத்து சட்டமன்ற அலுவலகம் திறக்கப்படாமல், சட்டமன்ற உறுப்பினரும் அலுவலகத்திற்கு வராமல் இருப்பது சரி இல்லை. எனவேஇதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.</p>
