25 ஆண்டு கால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி
19 Jun 2026, 12:27 am

25 ஆண்டு கால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி

தேன்கனிக்கோட்டை, ஜூன் 18- கிருஷ்ணகிரி மாவட்டம், தேன் கனிக்கோட்டை வட்டம் குள்ளட்டி மலைக்கிராம மக்களின் 25 ஆண்டு கால கோரிக்கையான இலவச வீடு மற்றும் வீட்டுமனைப் பட்டா கோரிக் கைக்குப் போராட்டத்தின் மூலம் தீர்வு கிடைத்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்ற தொடர் காத்திருப்புப் போராட்டம் வெற்றியுடன் நிறைவடைந்தது.

பின்னணி

கெலமங்கலம் அருகே உள்ள மலைக்கிராமமான குள்ளட்டியில் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றன. போதிய வாழ்வாதாரம் இன்றி வெளி யூர் சென்ற மக்கள், தற்போது ஊரி லேயே தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர். சிதிலமடைந்த வீடுகள் மற்றும் பட்டா இல்லாத அவலநிலை குறித்து, கடந்த 2021-ம் ஆண்டு முதல் மாவட்ட ஆட்சியர் மற்றும் முதலமைச்சர் அலுவலகத்தில் பல முறை முறையிட்டும் தீர்வு கிடைக்க வில்லை.

எழுச்சிமிகு காத்திருப்பு போராட்டம்

இறுதியாக, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கெலமங்கலம் ஒன்றியக் குழு சார்பில், தேன்கனிக் கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஒன்றிய செயலாளர் டி. ராஜா தலைமையில் காத்திருப்பு போராட் டம் நடைபெற்றது. கடுமையான மழை யையும் பொருட்படுத்தாமல் நடை பெற்ற இந்தப் போராட்டத்திற்கு துரை சாமி, குபேந்திரன், முருகன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். மாநிலக் குழு உறுப்பினர் ஆர். பத்ரி, மாவட்ட செயலாளர் சி. சுரேஷ், செயற்குழு உறுப்பினர் சி.பி. ஜெயராமன் ஆகியோர் கோரிக்கை களை வலியுறுத்திப் பேசினர். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.சேகர், சி. பிரகாஷ், ஆர். நடரா ஜன் மற்றும் மாவட்டக் குழு உறுப்பி னர்கள் இருதயராஜ், சீனிவாசன், அனுமப்பா, புருஷோத்தமரெட்டி, டி.எஸ்.பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வெற்றி உறுதி

தொடர்ந்து வட்டாட்சியருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், மார்க்சிஸ்ட் கட்சி வழங்கிய 230 குடும்பங்களின் பெயர் பட்டியலை அரசு ஏற்றுக்கொண்டது. ஜூன் 25 முதல் தினமும் 25 பேர் வீதம் நேரில் விசாரணை நடத்தி, தகுதியுள்ள அனைவருக்கும் பட்டா வழங்கப் படும் என வட்டாட்சியர் உறுதி அளித்தார். இந்த விசாரணைப் பணி களில் கட்சி சார்பில் டி. ராஜா பங்கேற்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப் பட்டது. அரசு கோரிக்கையை ஏற்று க்கொண்டதை அடுத்து, போராட்டம் வெற்றிகரமாகக் கைவிடப்பட்டது.