குத்தகை நிலத்திலிருந்து விவசாயிகளை வெளியேற்றக் கூடாது விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநாடு வலியுறுத்தல்
12 hours before
<p><strong>குத்தகை நிலத்திலிருந்து விவசாயிகளை வெளியேற்றக் கூடாது விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநாடு வலியுறுத்தல்</strong></p><p>கிருஷ்ணகிரி, ஜூலை 20– தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட 2-ஆவது மாநாடு காவேரிப்பட்டணத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஆர். சபாபதி தலை மையில் நடைபெற்ற இம்மாநாட்டை, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் சி. பிரகாஷ் தொடங்கி வைத்து உரையாற்றினார். செயலாளர் அனுமப்பா வேலை அறிக்கையை வாசிக்க, பொருளாளர் கே.சி. இராமசாமி முன்னிலை வகித்தார். தீர்மானங்கள் பல ஆண்டுகளாக வீடு கட்டி குடியிருந்து வருபவர்களுக்கு உடனடியாக வீட்டு மனைப் பட்டா வழங்கிட வேண்டும். பழுதடைந்த வீடுகளை அகற்றி புதிய வீடுகள் கட்ட உள்ள தடையை நீக்கி, மின் இணைப்பு வழங்க வேண்டும். பல தலைமுறைகளாக நிலத்தில் குடியிருந்து விவசாயம் செய்து வருபவர்களை, வீடுகள் மற்றும் குத்தகை நிலங்களில் இருந்து கட்டாயமாக வெளியேற்றக் கூடாது. இனாம் நில விவசாயிகளைக் குத்தகை விவசாயிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குத்தகைத் தொழிலாளர்களாகப் பதிவு செய்ய வேண்டும். இனாம் நிலப் பிரச்சனைகளைத் தீர்க்க அரசு அதிகாரிகள், சார்ந்த நிறுவனங்கள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் அடங்கிய மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் தேர்வு மாவட்டத் தலைவராக எம். ரவி, செயலாளராக பி. சந்திரன், பொருளாளராக நவீன ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநிலத் தலைவர் பி. செல்வம் நிறைவுரையாற்றினார். அரசகுமார் நன்றி கூறினார்.</p>
