மூதாட்டிக்கு நேர்ந்த கொடுமை குற்றவாளியை கைது செய்யக் கோரி மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்!
7 Jun 2026, 1:57 am
<p><strong>மூதாட்டிக்கு நேர்ந்த கொடுமை குற்றவாளியை கைது செய்யக் கோரி மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்!</strong></p><p>கிருஷ்ணகிரி, ஜூன் 6 - கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம் காட்டேரி கிராமத்தில், 85 வயது மூதாட்டி ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இக்கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளியைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்நிலையில், தமிழக அரசும் காவல்துறையும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும் என்றும், தலை மறைவாக உள்ள குற்றவாளியை உடனடியாகக் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, அனுமன் தீர்த்தம் நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட குழு உறுப்பினர் வி. கோவிந்தசாமி தலைமை தாங்கினார். வட்டச் செயலாளர் ஆர். சபாபதி முன்னிலை வகிக்க, மாவட்ட செயலாளர் சி. சுரேஷ் கண்டன உரை யாற்றினார். இப்போராட்டத்தில் மாதர் சங்க மாவட்ட செயலாளர் ராதா, விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் கட்சிப் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டு தங்களின் கண்டனங்களைப் பதிவு செய்தனர்.</p>
