தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

24 ஆண்டுகள் பழமையான காய்கறி சந்தையை மூடச்சொல்லி 10 ஆயிரம் பேரின் வாழ்வை பறிக்கப் பார்க்கும் மாவட்ட நிர்வாகம் முதல்வர் தலையிட கிருஷ்ணகிரி விவசாயிகள் கோரிக்கை

2 hours before
24 ஆண்டுகள் பழமையான காய்கறி சந்தையை மூடச்சொல்லி  10 ஆயிரம் பேரின் வாழ்வை பறிக்கப் பார்க்கும் மாவட்ட நிர்வாகம் முதல்வர் தலையிட கிருஷ்ணகிரி விவசாயிகள் கோரிக்கை

24 ஆண்டுகள் பழமையான காய்கறி சந்தையை மூடச்சொல்லி 10 ஆயிரம் பேரின் வாழ்வை பறிக்கப் பார்க்கும் 24 ஆண்டுகள் பழமையான காய்கறி சந்தையை மூடச்சொல்லி 10 ஆயிரம் பேரின் வாழ்வை பறிக்கப் பார்க்கும் மாவட்ட நிர்வாகம் முதல்வர் தலையிட கிருஷ்ணகிரி விவசாயிகள் கோரிக்கை

கிருஷ்ணகிரி, நவ.10-ஓசூர் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை பத்தலபள்ளியில் 24 ஆண்டுகளாக பட்டா நிலத்தில் இயங்கி வரும் பழமையான காய்கறி சந்தையை உடனே மூட வேண்டும் என அரசு அதிகாரிகள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருவதைக் கண்டித்து விவசாயிகள், வியா பாரிகள் உள்ளிட்ட பல ஆயிரம் பேர் போராட்டத்தில் குதி்த்துள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக பத்தலப் பள்ளி சந்தை வியாபாரிகள் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், ஓசூர் பத்தலப்பள்ளி மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் சங்கம் இணைந்து செவ்வா

யன்று வட்டாட்சியர் அலுவலகத்தில் பெருந்திரள் முறையீடு செய்தனர்.

1985 ஆம் ஆண்டு முதல் ஓசூர் நக

ருக்குள் அரசின் எம்ஜிஆர் காய்கறி சந்தையில் விவசாயிகள், காய்கறி வியாபாரிகள் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளை நடத்தி வந்தனர். அப்போதைய ஆளும் கட்சி நெருக்கடி காரணமாக அங்கு கடை வைத்திருந்த விவசாயிகள், வியா

பாரிகள் 2003 ஆம் ஆண்டு முதல் பத்தலப்பள்ளியில் ஓசூர் நகர வளர்ச்சி குழுமத்தின் முறையான அனு மதியோடு தனியார் பட்டா நிலத்தை வாங்கி 265 பேர் கடைகளுடன் தனித்தனியே சந்தை வளாகத்தை உருவாக்கி ஒற்றுமையாக வியாபாரம் செய்து வருகின்றனர்.

ஆனாலும் இடப் பற்றாக்குறை போக்குவரத்துக்கு இடையூறு என அரசு அதிகாரிகள் கூறி வந்த நிலை

யில் 10 ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய ஆட்சியர் கேட்டுக்கொண்ட தற்கு இணங்க மேலும் 8 ஏக்கர் தனி

யார் நிலத்தை குத்தகைக்கு எடுத்து

வாடகை செலுத்தி போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் பின்புறமாக போக்குவரத்து மற்றும் வியாபாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஓராண்டுக்கு முன்பு புதிய பேருந்து நிலையம் இதன் அருகில் கட்டத்துவங்கினர். அப்போது முதல் கூட்டாக பட்டா இடத்தில் நடத்தப்படும் இந்த சந்தையை மூடுவதற்கு திட்ட மிட்டு சில அரசு அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர். காய்கறி சந்தையை மூடும்படி தொடர்ந்து நோட்டீஸ் கொடுத்தும் பல்வேறு வகையில் தொல்லை கொடுத்தும் வருவதாக சந்தையில் உள்ள அனைத்து கடைக்காரர்களும் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்நிலையில், பட்டா நிலத்தில் செயல்படும் 265 கடைகளுக்கும் எந்தவித முறையான மாற்று ஏற்பாடு களும் செய்து தராமல், சந்தையை மூட வேண்டும் என்று ஓசூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மூன்று முறை நோட்டீஸ் வழங்கி உள்ளார்.

இந்த ஆண்டு இந்த சந்தைக்கு முறையான கட்டணம் மற்றும் வரை

வோலை செலுத்தியும் கூட கடை களுக்கு உரிமம் வழங்க மறுத்து இணையதள பதிவையும்

நிறுத்தி வைத்துள்ளனர்.

சந்தைக்கு தினசரி நூற்றுக்கணக் கான வாகனப் போக்குவரத்து,சுமார் 1,000 சுமை தூக்கும் தொழிலாளர்க ளும், காய்கறிகளை இங்கு கொண்டு வந்து விற்கும் 3000 க்கும் மேற்பட்ட மூன்று வட்டங்களை சேர்ந்த விவசாயிகளும், கடை நடத்துப வர்களும் என மொத்தமாக சுமார் 10,000 பேர் வரை இந்த சந்தையால் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர்.

இந்த சந்தையில் இருந்து தினமும் கேரள, ஆந்திர, கர்நாடக மாநிலங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய்க்கு வணிகம் நடைபெற்று வருகிறது. ஆண்டுக்கு பல ஆயிரம் கோடிக்கு மேல் வணிகம் நடைபெற்று வருவதாக இங்கு கடை நடத்தி வருபவர்கள் கூறுகின்றனர்.

மேம்பாலப் பணிகளுக்கோ அல்லது அரசுக்கோ இந்த (பத்தலப் பள்ளி) சந்தை தடையாக இல்லை. ஏற்கனவே அரசின் வேண்டுகோளை ஏற்று சாலையை ஆக்கிரமிக்காமல் பின்புற வாசல் வழியாகவே வாகனப் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தி நடத்தி வருவதுடன், குப்பை களையும், கழிப்பிட வளாகத்தையும் சுகாதார சந்தை வளாகத்தில் ஒழுங்காக பராமரித்து வருகின்றனர்.

மேலும் ஓசூர் ஒன்றிய பகுதி யில் பல வழி பட்டர்ஃபிளை சாலை, இரண்டு உள் வட்ட வெளிவட்ட சாலைகள் போடப்பட்டு முடியும் நிலையில் உள்ளதால் போக்குவரத்து நெரிசல் பாதியாக குறைய வாய்ப்புள்ளது.

மாவட்ட நிர்வாகம் நடத்திய அமைதிப் பேச்சுவார்த்தைகளில் மேற்கண்ட விஷயங்களை பல முறை எடுத்துக் கூறியும், பட்டா உள்ள மாற்று இடத்தில் நிலம் வழங்கி கட்டிடம் கட்டித்தந்தால் இந்த இடத்தை அங்கு மாற்றிக்கொள்ள சம்மதித்த போதும் மாவட்ட நிர்வாகம் மாற்று இடத்திற்கு உத்தரவாதம் தராமல் சந்தையை காலி செய்ய தீவிரம் காட்டி வருவதாக கடைக்காரர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

எனவே தமிழக முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டு, பல்லா யிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் அனைத்து கடைகளின் உரிமையாளர்களுக்கும் தகுந்த ஒரே மாற்று இடத்தில் பட்டா வழங்கி கடைகள் கட்டித்தந்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி வருகின்றனர்.

இவர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் ஓசூர் பத்தலப்பள்ளி மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் சங்கம் சார்பில் இந்த ஓசூர் சாராட்சியர் அலுவலகத்தில் பெருந்திரள் முறையீடு நடைபெற்றது.

இந்தப் பேரணி மற்றும் பெருந்திரள் முறையீட்டிற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஓசூர் வட்ட தலைவர் ராஜா ரெட்டி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் பி.பெருமாள், மாவட்ட தலைவர் எம்.முருகேஷ், செயலாளர் சி.பிரகாஷ், மாவட்ட பொருளாளர் சி.குமரன் மாவட்ட துணை தலைவர் எம்.எம்.ராஜு கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

மாநிலச் செயலாளர் பி.பெருமாள் பேசுகையில், சந்தை வியாபாரிகளின் நியாயமான கோரிக்கையை ஏற்காவிட்டால் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து மக்களை திரட்டி மாவட்டம் தழுவிய போராட்டங்கள் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

சந்தையின் தலைவர் கங்கா தர், செயலாளர்கள் மகேஷ், கிருஷ்ணப்பா, பொருளாளர் கோவர்தன்,

உடனடித் தலைவர் நாராயணப்பா, கவுரவத் தலைவர் செல்வராஜ், துணைத்தலைவர் ரங்கநாதன், ஸ்ரீநிவாஸ் தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்ட துணைத் தலைவர் ஆனந்த

குமார், துணைச் செயலாளர் ஆர்.கே. தேவராஜ், பொருளாளர், திம்ம

ராயப்பா, மார்க்சிஸ்ட் கட்சி செயற் குழு உறுப்பினர்கள் ஆர்.சேகர், ஆர்.நடராஜன், நாகராஜ் ரெட்டி, ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி கலந்து கொண்டனர்.

துணை சாராட்சியருடன் நடை பெற்ற பேச்சு வார்த்தையில் கோரிக்கைகளை பரிசீலிக்க மாவட்ட நிர்வாகத்திற்கும் மாநில அரசுக்கும் தெரிவிப்பதாக கூறினார். இது குறித்து போராட்ட தலைவர்கள் கூறுகை

யில், எங்களது கோரிக்கை ஏற்கப்படா விட்டால் 16 ஆம் தேதி மாவட்டம் தழுவிய மாபெரும் போராட்டம் நடத்த உள்ளோம் என்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.