தவெக-அதிமுக இணைப்பு என்று பேசினால் நடவடிக்கை!
5 Jul 2026, 10:43 pm

தவெக-அதிமுக இணைப்பு என்று பேசினால் நடவடிக்கை!

கே.பி. முனுசாமி பேட்டி

கிருஷ்ணகிரி, ஜூலை 5 - அமைச்சரவையை முதல்வர் விஜய் சினிமா வாகக் கருதுகிறார் என அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தவெகவுக்குப் பெரும்பான்மை இல்லாததால் அக்கட்சி குதிரை பேரத்தில் ஈடு பட்டு வருவதாகவும், பதவிக்காகவே பலர் அதி முகவை விட்டு தவெகவுக்குச் செல்கிறார்கள் எனவும் குற்றம் சாட்டினார். மதிமுக எம்எல்ஏ- க்களை, ராஜினாமா செய்ய வைத்து வெற்றி பெறச் செய்யும் நோக்கில் முதல்வர் விஜய் நேர டியாக குதிரை பேரம் நடத்துவதாகவும், இது தொ டர்பாக ஆளுநரிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார். அதிமுகவை விட்டு தவெகவில் இணைந்த வர்களை அவர் “ஓடுகாலிகள்” என விமர்சித்த முனுசாமி, ஆதவ் அர்ஜுனா மீண்டும் அதிமுக - தவெக இணைப்பு குறித்துப் பேசினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். கரூர் வழக்கை நீர்த்துப்போகச் செய்ய முயற்சி நடப்பதாகவும், போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான குற்றச்சாட்டில் சிக்கிய அமைச்சர் சரத் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார். முதல்வர் விஜய்யின் செயல்பாடுகள், தவெக அரசு ஐந்தாண்டு காலம் நீடிக்குமா என்ற கேள் வியை எழுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.