தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சிதிலமடைந்துள்ள மந்தித்தோப்பு சாலையை சீரமைத்து விரிவாக்கம் செய்திடுக! விவசாயத் தொழிலாளர் சங்க கோவில்பட்டி ஒன்றிய மாநாடு கோரிக்கை

28 Jun 2026, 11:40 pm

தூத்துக்குடி, ஜூன் 28- அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் கோவில்பட்டி ஒன்றிய முதல் மாநாடு மந்திதோப்பு ரோட்டில் உள்ள பாரதி இல்லத்தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு ஒன்றிய குழு உறுப்பினர் சித்ரா தலைமை தாங்கினார் .சின்னத்தம்பி வரவேற்றார் மாநாட்டை துவக்கி வைத்து சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் கிருஷ்ண வேணி பேசினார். மாநாட்டில் ஒன்றிய தலை வராக ஈஸ்வரி ,செயலாளராக முத்துராஜன் ,பொருளாளராக சின்னத்தம்பி உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். சிதிலமடைந்து கிடக்கும் மந்தி தோப்பு சாலையை சீரமைத்து விரிவாக்கம் செய்ய வேண்டும். 100 நாள் வேலைத்திட்ட தொழி லாளிகளுக்கு கண் விழி பதிவு செய்வதை கைவிட வேண்டும். 100 நாள் வேலையை முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்பகபேரியில் சாலை வசதி, பேருந்து வசதி, தெருவிளக்கு வசதி செய்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டை நிறைவு செய்து விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கு. ரவீந்திரன் பேசினார். விவசாய தொழிலாளர் சங்கத்தின் தாலுகா குழு உறுப்பினர் மல்லிகா நன்றி கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.