தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மேற்குத் தொடர்ச்சி மலையில் கனமழை: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

8 Jun 2026, 1:08 am
மேற்குத் தொடர்ச்சி மலையில் கனமழை: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்
<p><strong>மேற்குத் தொடர்ச்சி மலையில் கனமழை: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்</strong></p><p>கோவை, ஜூன் 7- மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டுள்ள நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி கோவை குற்றாலம் அருவி சனியன்று முதல் தற்காலிக மாக மூடப்பட்டுள்ளது. கோவை மற்றும் சுற்றுவட்டார மலைப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், நீர்ப் பிடிப்பு பகுதிகளில் இருந்து கோவை குற்றாலம் அரு விக்கு அதிகளவில் நீர் வரத்து ஏற்பட்டுள்ளது. இதன் கார ணமாக அருவியில் வெள்ளநீர் ஆபத்தான அளவை எட்டி யதுடன், காட்டாற்று வெள்ளமாக கரைபுரண்டு ஓடுகி றது. பாறைகள் மற்றும் தரைப்பகுதிகள் தெரியாத அள விற்கு தண்ணீர் வேகமாக பாய்ந்து வருவதால், சுற்று லாப் பயணிகள் அருவியில் குளிப்பதோ அல்லது அதன் அருகே செல்வதோ உயிருக்கு ஆபத்தாக இருக்கும் சூழல் நிலவுகிறது. இதையடுத்து, போளுவாம்பட்டி வனச்சரக அதிகாரிகள் அவசர அறிவிப்பு வெளியிட்டு, கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா மையத்தை தற் காலிகமாக மூடுவதாக அறிவித்துள்ளனர். மேலும், வெள்ளநீரின் வேகம் குறைந்து நிலைமை சீராகும் வரை பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணி கள் கோவை குற்றாலம் பகுதிக்குள் செல்ல தடை விதிக் கப்பட்டுள்ளது. வார இறுதி விடுமுறையை முன்னிட்டு அருவிக்கு செல்ல திட்டமிட்டிருந்த சுற்றுலாப் பயணி கள் ஏமாற்றமடைந்தாலும், பாதுகாப்பு கருதி வனத் துறையின் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு அதிகாரி கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.