முந்தய பக்கம்

கோட்டார் அரசுப் பள்ளியிலிருந்து வெளியேறும் கழிவுநீர்! சீரமைக்க மக்கள் கோரிக்கை

29 Jun 2026, 9:03 pm
கோட்டார் அரசுப் பள்ளியிலிருந்து வெளியேறும் கழிவுநீர்! சீரமைக்க மக்கள் கோரிக்கை
<p><strong>கோட்டார் அரசுப் பள்ளியிலிருந்து வெளியேறும் கழிவுநீர்! சீரமைக்க மக்கள் கோரிக்கை</strong></p><p>நாகர்கோவில், ஜூன் 29 - கோட்டார் அரசுப் பள்ளியில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. அதனை உடனே சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகர்கோவில் கோட்டார் செட்டித்தெரு பகுதியில் அமைந்துள்ள அரசுப் பள்ளியிலிருந்து வெளிவரும் கழிவுநீர் தேங்கி, அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடும் தொற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. இதனால் அப்பகுதி பொது மக்களும் பள்ளி மாணவர்க ளும் அச்சம் அடைந்துள்ளனர். பள்ளி மாணவர்களின் நலனில் அக்கறை கொள்ளாத கல்வி நிர்வாகத்தின் மீது தமிழக சுகாதாரத் துறை உடனே நடவடிக்கை எடுத்து, பள்ளி மாணவர்களையும் அப்பகுதி பொது மக்களையும் தொற்று நோயிலிருந்து பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வ லர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram