தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோட்டப்பாளையம் மக்களின் பல ஆண்டு போராட்டம் வெற்றி பொது கல்லறையில் தலித் கிறிஸ்தவர் உடல் அடக்கம்!

20 Jul 2026, 9:50 pm
கோட்டப்பாளையம் மக்களின் பல ஆண்டு போராட்டம் வெற்றி  பொது கல்லறையில் தலித் கிறிஸ்தவர் உடல் அடக்கம்!

கோட்டப்பாளையம் மக்களின் பல ஆண்டு போராட்டம் வெற்றி பொது கல்லறையில் தலித் கிறிஸ்தவர் உடல் அடக்கம்!

திருச்சிராப்பள்ளி, ஜூலை 20 - திருச்சி மாவட்டம், கோட்டப்பாளையம் கிராமத்தில் கிறிஸ்தவ தேவாலய வழிபாட்டு முறை மற்றும் பொது கல்லறையில் நிலவி வந்த சாதிய பாகுபாடுகளுக்கு எதிராக, தலித் கிறிஸ்தவ மக்கள் நடத்திய பல்லாண்டு கால சட்டப் போராட்டம் தற்போது வெற்றி பெற்று உள்ளது.

தொடர் போராட்டமும் நீதிமன்ற உத்தரவும்

அரசுக்குச் சொந்தமான கல்லறையை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே பயன் படுத்தி வந்த நிலையில், தலித் கிறிஸ்த வர்கள் உரிமை கோரி துறையூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து சாதகமான உத்தர வைப் பெற்றிருந்தனர். இருப்பினும், நடை முறையில் அதனைப் பொதுக் கல்லறை யாகப் பயன்படுத்த முடியாத நிலை நீடித்து வந்தது. இந்நிலையில், இக்கிராமத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் சவரிராஜ் கடந்த ஜூலை 17 அன்று காலமானார். அவ ரது உடலைப் பொதுக் கல்லறையில் அடக்கம் செய்யச் சென்றபோது, குறிப்பிட்ட பிரிவினர் தடுத்து நிறுத்தினர்.

இடதுசாரி அமைப்புகளின் தலையீடு நீ

திமன்ற உத்தரவைச் செயல்படுத்தக் கோரி தலித் மக்கள் உடலை அடக்கம் செய்யாமல் இரண்டு நாட்களாகக் காத்தி ருந்தனர். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலச் செயலாளர் எம்.ஜெயசீலன் தலைமையில் இடதுசாரி அமைப்புகள் போராட்டத்தை அறிவித்தன. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி யது. முசிறி சார் ஆட்சியர் சுக்ரி சுவாங்கி குந்தியா, தாசில்தார் சித்ரா, டிஎஸ்பி முத்துக் குமார் மற்றும் கூடுதல் டிஎஸ்பி தன்ராசு ஆகி யோர் முன்னிலையில் நள்ளிரவு வரை நடந்த பேச்சுவார்த்தையில், அந்த இடம் ‘பொதுக் கல்லறையாக’ மாற்றப்படும் என உடன்பாடு எட்டப்பட்டது. அதனைத் தொ டர்ந்து, சவரிராஜின் உடல் நள்ளிரவு 1.30 மணியளவில் அடக்கம் செய்யப்பட்டது.

பெரும் நம்பிக்கை

இந்தப் போராட்டத்திலும் பேச்சு வார்த்தையிலும் சிபிஎம் தா.பேட்டை ஒன்றியச் செயலாளர் எஸ்.பாண்டியன், துறையூர் ஒன்றியச் செயலாளர் கணேசன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எம்.ஆனந் தன், பாலகுமார், கோட்டப்பாளையம் பங்குத் தந்தை அருட்திரு மைக்கேல் மற்றும் கிராம மக்கள் பலர் கலந்துகொண்டனர். திருச்சி மாவட்டத்தில் கிறிஸ்தவ மதத்தில் நிலவும் தீண்டாமைக்கு எதிராகப் பல வழக்குகள் நிலுவையில் உள்ள சூழலில், கோட்டப்பாளையம் மக்களின் இந்த வெற்றி தலித் கிறிஸ்தவ மக்களிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.