தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வேர்களை அறிந்துகொள்வோம்: கோட்டையில் கொடியேற்றிய பாஷ்யம் - ச. வீரமணி

17 May 2026, 8:49 pm
வேர்களை அறிந்துகொள்வோம்: கோட்டையில் கொடியேற்றிய பாஷ்யம் - ச. வீரமணி

வேர்களை அறிந்துகொள்வோம்: கோட்டையில் கொடியேற்றிய பாஷ்யம் - ச. வீரமணி

கார்ப்பரேட் நிறுவனங்களின் ஊடகங்களாலும், வணிகக் கல்வி நிறுவனங்களாலும் இன்றைய இளம் தலைமுறையினரிடம் நச்சுக் கலாச்சாரம் விதைக்கப்பட்டு வரும் பேராபத்தான சூழல் நிலவுகிறது. இளைய சமூகத்தை சமூக மற்றும் அரசியல் அறிவோடு மீட்டெடுக்க வேண்டிய கட்டா யத்தில் நாம் இருக்கிறோம். அதற்கு நம் முன்னோர்களின் வீரவரலாற்றை அவர் களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது “கோட்டையில் கொடியேற்றிய பாஷ்யம்” நூல்.

வரலாற்று நாயகன் பாஷ்யம்

மன்னை இரா. இயேசுதாஸ் தொகுத்து ள்ள ‘கோட்டையில் கொடியேற்றிய பாஷ்யம்’ இச்சிறுநூல், இந்திய விடு தலைப் போரின் மறக்க முடியாத ஒரு வீர அத்தியாயத்தை நம் கண்முன் நிறுத்து கிறது. மன்னையை அடுத்த சேரன்கு ளத்தைச் சேர்ந்த பாஷ்யம் (என்கிற ஆர்யா), பிரிட்டிஷாரின் கடுமையான அடக்குமுறை ஆட்சி நிலவிய காலத்திலேயே, சென்னை புனித ஜார்ஜ் கோட்டையின் உச்சியில் ஏறி மூவர்ணக் கொடியை ஏற்றிப் பறக்கவிட்ட தீரர் ஆவார்.

கம்யூனிசப் பாரம்பரியம்

சுதந்திரப் போராட்ட வீரராக மட்டுமல்லா மல், நாட்டில் சமத்துவ சமுதாயம் மலர வேண்டும் என்ற உன்னத நோக்கில், இந்தி யக் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய தமிழகத்தின் நிறுவனத் தலைவர்களில் ஒருவராகவும் பாஷ்யம் திகழ்ந்துள்ளார். தென்னகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பிதாமகரான தோழர் அமீர் ஹைதர்கானு டன் இணைந்து களம் கண்ட பாஷ்யத்தின் ஆளுமையை இச்சிறுநூல் மிகச் சிறப்பாகப் பதிவு செய்துள்ளது.

தலைமுறைக்கான வரலாற்றுப் பாடம் நாம் சிறுவர்களாக இருந்தபோது சோவியத் பிரசுரங்கள் நமக்கு ஏற்படுத்திய அரசியல் விழிப்புணர்வைப் போல, மீண்டும் ஒரு வாசிப்பு இயக்கத்தை உருவாக்க வேண்டும். அதற்கு இத்தகைய வரலாற்றுச் சிறுபிரசுரங்கள் மிக முக்கியமான கருவிகள். ஒவ்வொரு தோழரும் அவசியம் வாசிக்க வேண்டிய இப்புத்தகம், நமது விடுதலைப் போராட்டத்தின் மற்றும் இடதுசாரி இயக்கத்தின் வேர்களை இன்றைய இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் ஒரு பாசறைக் கையேடாகும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.