தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோதையாற்றில் மீண்டும் முதலை நடமாட்டம்? பொதுமக்கள் அச்சம்; வனத்துறை நடவடிக்கை

8 Jun 2026, 9:52 pm
கோதையாற்றில் மீண்டும் முதலை நடமாட்டம்? பொதுமக்கள் அச்சம்; வனத்துறை நடவடிக்கை
<p><strong>கோதையாற்றில் மீண்டும் முதலை நடமாட்டம்? பொதுமக்கள் அச்சம்; வனத்துறை நடவடிக்கை</strong></p><p>அருமனை, ஜூன் 8 - கன்னியாகுமரி மாவட்டம் கோதையாற்றில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதலைகள் நட மாட்டம் என வலைதளங்க ளிலும், பொதுமக்கள் சிலர் நேரில் பார்த்ததாகவும் கூறி யதன்படி வனத் துறையினர் கூண்டு வைத்தனர். ஆனால் முதலைகள் சிக்கவில்லை. பல மாதங்களுக்குப் பிறகு, தற்போது கோதை யாற்றில் களியல் பகுதியில் முதலை நடமாட்டம் இருப்ப தாக பொதுமக்கள் பார்த்து, அதை புகைப்படம் எடுத்து வலைதளங்களில் பதி விட்டுள்ளனர். இதனால் களியல் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதி கோதை யாற்றின் கரையோரம் வசிக்கின்ற பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். சில மாதங்களாக பேச்சிப் பாறை கோதையாற்றில் நீர் வரத்து குறைந்து இருந்த தால், முதலை யார் கண்ணி லும் தென்படவில்லை. தற்போது நீர்வரத்து அதிக ரித்து இருப்பதால் மீண்டும் ஆற்றின் கரையிலும் பாறை களிலும் தென்பட துவங்கி யுள்ளது. மழையால் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவ தால், மீண்டும் முதலை தென்பட துவங்கியது. இந் நிலையில், பொது மக்கள் முதலையை பிடிக்க வனத்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர். கோரிக்கை யை ஏற்று, வனத்துறை தற்போது முதலையை பிடிக் கும் பணியை தீவிரப்படுத்தி உள்ளது. இதனொரு பகுதியாக முதலை நடமாட்டம் அதிகம் உள்ள ஆற்றுப் பகுதியில் ஏற்கனவே வனத்துறை சார்பில் ஒரு கூண்டு வைக் கப்பட்டுள்ளது. அந்த கூண்டுக் குள் மீன்களை இரையாக வைத்து முதலையைப் பிடிப்பதற்கான ஏற்பாடு களை வனத்துறையினர் செய்துள்ளனர். </p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.