கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
17 Jul 2026, 11:48 pm

கோத்தகிரி கிராமங்களில் லட்சக்கணக்கான பூச்சிகள் படையெடுப்பு: மக்கள் கடும் அவதி!

உதகை, ஜூலை 17 – நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள பல கிராமங்களில், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக லட்சக்கணக்கான பறக்கும் பூச்சிகள் வீடுகளை நோக்கிப் படையெடுத்து வருவதால் பொது மக்கள் மற்றும் வியாபாரிகள் பெரும் அச்சமடைந்துள்ளனர். கோத்தகிரி மலைப்பாதையில் உள்ள குஞ்சப்பனை மற்றும் கொட்டகம்பை பகுதிகளில் முதன்முதலில் தென்பட்ட இந்தப் பூச்சிகளின் நடமாட்டம், தற்போது அரவேனு, கேத்தரின் நீர்வீழ்ச்சி சாலை உள்ளிட்ட பல கிராமங்க ளுக்கும் வெகுவாகப் பரவியுள்ளது. சிறிய அளவிலான கருப்பு ஈக்கள் வடிவில் இருக்கும் இந்தப் பூச்சிகள், பகல் நேரங்களை விட மாலை மற்றும் இரவு நேரங்களில் மின் விளக்குகளின் வெளிச்சத்தை நோக்கி லட்சக்கணக்கில் குவி கின்றன. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வியா பாரிகள் கூறுகையில், ”கடந்த சில நாட்களாக கடைகள் மற்றும் வீடுகளுக்குள் புகுந்துவிடும் இந்தப் பூச்சிகளால் சமைத்து வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்கள் அனைத்தும் வீணாகிப் போகின்றன. காற்றில் கூட்டமாகப் பறக்கும் இவை மனிதர்களின் கண், காது, மூக்கு ஆகிய வற்றுள்ளும் புகுந்து விடுகின்றன. குழந்தைகளை வைத்துக் கொண்டு வீட்டில் நிம்மதியாக வாழ முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது தற்காலிகத் தீர்வாக, பெரும்பாலான கடைகள் மற்றும் வீடுகளில் வெள்ளைத் தாள்களில் விளக்கெண்ணெய் உள்ளிட்ட எண்ணெய்களைத் தடவி தொங்கவிட்டுள்ளோம். அதில் பல்லாயிரக்கணக்கான பூச்சிகள் ஒட்டிக் கொண் டாலும், இவற்றின் பெருக்கத்தை முழுமையாகக் கட்டுப்ப டுத்த முடிவதில்லை,” என வேதனை தெரிவித்தனர். தேயிலைத் தோட்டங்கள் மற்றும் வனப்பகுதிகளில் நில வும் தட்பவெப்ப நிலை மாற்றம் காரணமாகவோ அல்லது ஏதேனும் குறிப்பிட்ட தாவரங்களின் மலரும் பருவத்தினாலோ இத்தகைய பூச்சிகள் திடீரெனப் பெருகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை மற்றும் வனத்துறையினர் உடனடியாக இப்பகுதிகளில் நேரில் கள ஆய்வு செய்ய வேண்டும். திடீரென இவ்வளவு பூச்சிகள் படையெடுப்பதற்கான அறிவியல் பூர்வமான காரணத்தைக் கண்டறிவதோடு, உரிய பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளித்து இவற்றை உடனடியாகக் கட்டுப்படுத்த நடவ டிக்கை எடுக்க வேண்டும் என மலைக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசு ஊழியர் சங்க பேரவை

கோவை, ஜூலை 16- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் ஆனைமலை மற்றும் கிணத்துக்கடவு வட்ட பேரவை கூட்டங்களில் புதிய நிர்வாகி கள் தேர்வு செய்யப்பட்டனர். கோவை மாவட்டம், ஆனைமலையில் புதனன்று தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முதல் வட்டாரக் கிளை பேரவைக்கூட்டம் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் நடை பெற்றது. வட்டார கிளைத் தலைவர் எம். ஜான்பாட்ஷா தலைமை வகித்தார். சங்கத்தின் மாவட்டத் தலைவர் ச.ஜெகன்நாதன் துவக்கவுரையாற்றினார். அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க செயலாளர் என்.பழனிச்சாமி சிறப்புரை யாற்றினார். மாவட்ட இணைச் செயலாளர் வி. சின்னமாரி முத்து நிறைவுரையாற்றினார். இதனை தொடர்ந்து தலைவ ராக எம்.ஜான்பாட்ஷா, செயலாளராக டி.சபரிநாதன், பொரு ளாளராக எஸ்.கவிதா உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப் பட்டனர். பொ. மனோன்மணி நன்றி கூறினார். கிணத்துக்கடவு வட்டக்கிளையில் நடைபெற்ற பேரவைக்கு தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமை ஏற்றார். கிராம சுகாதார செவிலியர்கள் சங்கத்தின் பானுமதி வாழ்த்திப் பேசினார். சங்க மாவட்ட இணைச் செயலாளர் சின்னமாரி முத்து நிறைவுரையாற்றினார். இதில், தலைவராக பாலசுப் பிரமணியம், செயலாளராக சாந்தி, பொருளாளராக வீரமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தருமபுரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 17 ஆவது தருமபுரி வட்ட பேரவை வட்ட துணைத்தலைவர் எம். தங்கதுரை தலைமையில் நடைபெற்றது. மாவட்ட தணைத்தலைவர் ஆஆர்.ஜெயவேல் துவக்கி வைத்தார். வட்ட செயலாளர் எம். மணிரத்தினம் செயலாளர் அறிக்கை வாசித்தார். மாவட்ட செயலாளர் ஏ. தெய்வானை உள்ளிட்டோர் வாழத்திப்பேசி னர். மாவட்ட தலைவர் எம். சுருளிநாதன் நிறைவுறையாற்றி னார். இதில், வட்ட தலைவராக எம். தங்கதுரை வட்ட செயலா ளராக எம். மணிரத்தினம் பொருளாளராக எஸ். தமிழரசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

கூட்டுறவு பயிர் கடன் செலுத்த நோட்டீஸ் வழங்கியதை கண்டித்து விவசாயிகள் புகார்

சேலம், ஜூலை 17- கூட்டுறவு பயிர் கடனை உடனடியாக செலுத்துமாறு விவசாயிகளுக்கு நோட்டீஸ் வழங்கியதை கண்டித்து விவசாயிகள் சங்க நிர்வாகிகள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் புகார் மனு அளித்து, தமிழக அரசு தலையீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி னர். சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு பயிர் கடனை உடனடியாக செலுத்த வேண்டும் என்று கூறி கூட்டுறவு சங்க அதிகாரிகள் விவ சாயிகளுக்கு நோட்டீஸ் வழங்கியதாக குற்றம்சாட்டி, விவசாயிகள் சங்க நிர்வாகி கள் வெள்ளியன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், தமிழகம் முழுவதும் விவசாயி களின் கூட்டுறவு பயிர் கடன்களை முழுமை யாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போதைய அரசு பட்ஜெட் தொடர்பாக விவசாயிகளிடம் கருத்து கேட்டு கூட்டங்கள் நடத்தி, கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்வதாக வாக்கு றுதி அளித்திருந்ததாக தெரிவித்தனர். ஆனால் தற்போது கூட்டுறவு சங்க அதிகாரி கள் பயிர் கடனை உடனடியாக செலுத்து மாறு நோட்டீஸ் வழங்குவது கண்டனத் திற்குரியது என்றும், இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு விவசா யிகளின் கோரிக்கைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

புற்றுநோய் விழிப்புணர்வு

நாமக்கல், ஜூலை 17- திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் மகளிர் கலை மற்றும் அறி வியல் கல்லூரியில் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டுக்குழு மற்றும் இன்டெர்னல் கம்பளைன்ட் கமிட்டி இணைந்து நடத்தும் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி வெள்ளியன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சி கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஆர்.சீனிவாசன், துணைத் தாளாளர் கே.எஸ். சச்சின் மற்றும் கே.எஸ்.ஆர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனை வர் எம்..கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஸ்மார்ட்கிட்ஸ் பிரக்னன்சி கேரிங் சென்டர், நிறுவனர் முனை வர் ஜெயந்தி ரமேஷ்குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவம் குறித்தும், மார்பகப் புற்றுநோயை கண்டறிவதற்கான சுய பரிசோதனை முறைகள் குறித்து மாணவிகளிடையே விழிப் புணர்வை ஏற்படுத்தினார்.

அணைகள் நிலவரம்

பவானிசாகர் அணை நீர்மட்டம்:59.50/105 அடி நீர்வரத்து:422 கனஅடி நீர்திறப்பு:1255 கனஅடி பரம்பிக்குளம் அணை நீர்மட்டம்:20.38/72 அடி நீர்வரத்து:1236கனஅடி நீர்திறப்பு:920கனஅடி சோலையார் அணை நீர்மட்டம்:86.76/160 அடி நீர்வரத்து:415.71கனஅடி நீர்திறப்பு:1357கனஅடி ஆழியார் அணை நீர்மட்டம்:56.40/120அடி நீர்வரத்து:288கனஅடி நீர்திறப்பு:356கனஅடி

பேருந்து மோதி மின்கம்பம் உடைந்தது

திருப்பூர், ஜூலை 17- திருப்பூர்–பெருமா நல்லூர் சாலையில் உள்ள நெசவாளர் காலனி அருகே சாலையோர மின்கம்பத்தில் அரசுப் பேருந்து மோதியது. இதில் மின்கம்பம் இரண்டாக உடைந்து சாலையில் விழுந் ததால், அப்பகுதியில் பாது காப்பு கருதி உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட் டது. இதனால் பெருமா நல்லூர் சாலையில் கடுமை யான போக்குவரத்து நெரி சல் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த போக்குவரத்துப் போலீ சார் வாகனங்களை மாற்றுப் பாதையில் திருப்பிவிட்டு போக்குவரத்தை சீரமைத்த னர். மின்வாரிய ஊழியர்கள் சேதமடைந்த கம்பத்தை அகற்றி, புதிய மின்கம்பம் அமைக்கும் பணியில் ஈடு பட்டனர்.

பிஎஸ்என்எல் சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஜூலை 17 - ஊதிய மாற்றம் ஓய்வூதிய மாற்றத்தை உடனே வழங்க வலியுறுத்தி திருப்பூரில் பிஎஸ்என்எல் ஊழியர்கள், தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் ஓய்வு பெற்றோர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பிஎஸ்என்எல் ஊழியர் சங்க கிளை தலைவர் எம்.அண்ணாதுரை தலைமை தாங்கினார். ஓய்வூதியர் சங்க கிளைச் செயலாளர் கே.விஸ்வநாதன், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் மாநில உதவி செயலாளர் ஜே.அருண்குமார், ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலை வர் பி.சௌந்திர பாண்டியன், தொலைத்தொடர்பு ஒப் பந்த தொழிலாளர் சங்க மாநில நிர்வாகி ஏ.ரமேஷ், பல்லடம் கிளை ஜெயராஜ் ஆகியோர் உரையாற்றினார் கள். சுமார் 50 பேர் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் முடி வில் முகமது ஜாபர் நன்றி கூறினார்.

உடுமலை தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார்

சோதனை உடுமலை, ஜூலை 17- மாநிலம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்தி வரும் அதிரடி சோதனையின் ஒரு பகுதியாக, உடுமலை தாலுகா அலுவலகத்தில் வெள்ளி யன்று திடீர் சோதனை நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் வட்டாட்சியர், மாநகராட்சி மற்றும் ஊராட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்க ளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, உடு மலை தாலுகா அலுவலகத்திற்கு லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையிலான 10-க்கும் மேற்பட்ட போலீசார் திடீரென வந்தனர். அவர்கள் அலுவலகத்தில் பணியில் இருந்த ஊழியர்கள் மற்றும் அங்கு வந்திருந்த வருவாய்த்துறை யினரின் வாகனங்கள், பைகள் உள்ளிட்டவற்றைச் சோதனை யிட்டனர். மேலும், தாலுகா அலுவலக கோப்புகளும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டன. இச்சோதனை குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில், ”இது வழக்கமான ஒரு சோதனைதான்; எவ்வித குறிப்பிட்ட புகாரின் அடிப்படையி லும் இந்த சோதனை நடத்தப்படவில்லை” என்று தெரி வித்தனர். எனினும், லஞ்ச ஒழிப்பு போலீசாரின் இந்த திடீர் அதிரடி சோதனை உடுமலை அரசு வட்டாரத்தில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டவிரோதமாக தங்கிய வங்கதேசத்தினர் 11 பேருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை!

திருப்பூர், ஜூலை 17- திருப்பூரில் முறையான ஆவணங்களின்றி சட்டவிரோத மாகத் தங்கி வேலை செய்து வந்த வங்கதேசத்தினர் 11 பேருக்குத் தலா 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.10,000 அபராதம் விதித்து திருப்பூர் நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2025 ஜனவரி 28 அன்று, திருப்பூர் நல்லூர் காவல் எல்லைக்குட்பட்ட வள்ளியம்மை நகர் பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின் பேரில் பிடிபட்ட முகமது அஷ்ரபுல் அலோம், முகமது ருபெல் உள்ளிட்ட வங்கதேசத்தைச் சேர்ந்த 11 பேர், எவ்வித கடவுச் சீட்டு மற்றும் விசா இன்றி சட்டவிரோதமாக எல்லை தாண்டி வந்து, பனியன் நிறுவனங்களில் வேலை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து 11 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதுதொடர்பான வழக்கு திருப்பூர் இரண்டாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. இறுதி விசாரணை முடிவ டைந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கும் தலா 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், தலா ரூ.10,000 அபராதமும் விதித்து நீதிபதி கனகராஜ் தீர்ப்பளித்தார்.

வழக்கறிஞர் கொலை வழக்கு: சாட்சியை கொல்ல முயன்ற கூலிப்படை உட்பட 5 பேர் கைது!

திருப்பூர், ஜூலை 17- தாராபுரம் மாற்றுத்திறனாளி வழக்கறிஞர் முருகானந்தம் கொலை வழக்கின் முதன்மை சாட்சியை வெட்டிப் படு கொலை செய்ய முயன்ற வழக்கில், கூலிப்படையைச் சேர்ந்த 3 பேர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தனியார் பள்ளி விதிமீறல் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் முரு கானந்தம், கடந்த ஆண்டு ஜூலை 28 அன்று பள்ளி தாளாளர் தண்டபாணி ஏவிய கூலிப்படையினரால் படுகொலை செய் யப்பட்டார். இவ்வழக்கில் தண்டபாணி, அவரது மகன் உட்பட 18 பேர் கைதாகி சிறையில் உள்ளனர். இந்நிலையில், இவ்வழக்கின் முக்கிய சாட்சியான தங்க வேல் என்பவரை கடந்த 7-ஆம் தேதி தாராபுரம் அருகே ஒரு கும்பல் வெட்டிப் படுகொலை செய்ய முயன்றது. படுகாய மடைந்த அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தனிப் படை அமைத்து விசாரணை நடத்திய போலீசார், கொலை முயற்சிக்கு உடந்தையாக இருந்த தொப்பம்பட்டி நந்தகுமார் (52), நாகர்கோவில் பாபு சாகுலின் (32) ஆகியோரை முதலில் கைது செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக இருந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த கூலிப்படையினர் முகமது ரின்சாத் (30), முகமது சமீம் (32), ரஷீத் (36) ஆகிய 3 பேரையும் திருப்பூர் ரயில் நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்து சிறை யில் அடைத்தனர்.