தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கொருக்குப்பேட்டை கூட்ஸ் ஷெட்டில் வெங்காயம் தேங்கியதால் துர்நாற்றம்

2 Nov 2026, 12:22 am
கொருக்குப்பேட்டை கூட்ஸ் ஷெட்டில் வெங்காயம்  தேங்கியதால் துர்நாற்றம்

கொருக்குப்பேட்டை கூட்ஸ் ஷெட்டில் வெங்காயம் தேங்கியதால் துர்நாற்றம்

சென்னை, நவ.1-சென்னை வியாசர்பாடி கொருக்குப்பேட்டை ரயில்வே கூட்ஸ் ஷெட்டில் வெளிமாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட சுமார் 250 டன் வெங்காயம் கெட்டுப்போய் துர்நாற்றம் வீசுகிறது. அதிகாரிகள் உரிய முடிவு எடுத்து அனுமதி வழங்காததால் கடந்த இரண்டு நாட்களாக வெங்காயம் கூட்ஸ் செட்டிலேயே தேங்கிக் கிடக்கிறது.

இந்நிலையில், வெங்காயம் கெட்டுப்போய் துர்நாற்றம் வீசுவதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து உணவு மற்றும்நுகர்வோர் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்துவிட்டு சென்றதாகவும், ஆனால் இதுவரைவெங்காயத்தை எடுத்துச் செல்வது தொடர்பாக எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.இதனால் லாரிகளில் ஏற்றப்பட்ட வெங்காயம் இரண்டுநாட்களாக அங்கேயே தேங்கிக் கிடக்கிறது. வெளிமாவட்டங்களில் இருந்து வந்த லாரி ஓட்டுநர்கள் குளிக்க முடியாமலும், இயற்கை உபாதைகளைக் கழிக்க முடியாமலும், முறையாக உணவு அருந்த முடியாமலும் லாரிகளிலேயேதங்கியிருந்து கடும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.

இதுகுறித்து வேதனை தெரிவித்த ஓட்டுநர்கள், தீபாவளி பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாட வேண்டிய நேரத்தில், சென்னையில் இரண்டு நாட்களாகக்காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறினர். வெங்காயம் மேலும் கெட்டுப் போவதுடன் துர்நாற்றமும்அதிகரித்து வருவதாகவும், அதிகாரிகள் உடனடியாக உரியமுடிவு எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.அரசு சார்பில் கொள்முதல் செய்யப்பட்ட வெங்காயம் கெட்டுப்போய் துர்நாற்றம் வீசும் நிலையில், இரண்டுநாட்களாகக் கூட்ஸ் ஷெட்டில் தேங்கிக் கிடப்பது ஏன்? அதிகாரிகள் ஏன் இதுவரை இறுதி முடிவு எடுக்கவில்லை? வெங்காயத்தைப் பாதுகாக்கவும், லாரி ஓட்டுநர்களின்பிரச்சனைக்குத் தீர்வு காணவும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.