முந்தய பக்கம்

கொரட்டூர் ஏரி விழிப்புணர்வு பொங்கல் கொண்டாட்டம்

9 Feb 2026, 3:02 pm
கொரட்டூர் ஏரி விழிப்புணர்வு பொங்கல் கொண்டாட்டம்
<p><strong>கொரட்டூர் ஏரி விழிப்புணர்வு பொங்கல் கொண்டாட்டம்</strong></p> <p>சென்னை, பிப். 9- நீர்நிலையை பாதுகாப்பதற்கான கூட்டு முயற்சியை குறிக்கும் வகையில் &lsquo;ஏரி பொங்கல்&rsquo; கொண்டாடினர். பாரம்பரிய உடையில், மண் பானை கள் மற்றும் கரும்புகளுடன் குடியிருப்பா ளர்கள், சிலம்பக் கலைஞர்கள், ஜல்லிக்கட்டு காளைகளோடு ஞாயிறன்று கொரட்டூர் ஏரிக்கரையில் ஊர்வலமாகச் சென்றனர். 594 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியை பறவைகள் சரணாலயமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் இணைந்த பங்கேற்பாளர்கள், பேரணிக்கு பிறகு பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டனர். மேலும் கலை நிகழ்ச்சிகள், கோலப் போட்டி கள், இசை நாற்காலி விளையாட்டு மற்றும் மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டன. நாங்கள் 8ஆவது ஆண்டாக நடத்தி வருகிறோம். ஆக்கிரமிப்பு முதல் மாசுபாடு வரை ஏரி பல சிக்கல்களை எதிர் கொண்டுள்ளது, மேலும் குடியிருப்பா ளர்களும் இதைக் கண்டும் காணாமல் இருந்து விட்டனர். ஏரியை வாட்டி வதைக்கும் பிரச்சனைகளை மக்களுக்குத் தொடர்ந்து நினைவூட்ட வேண்டியது அவசியமாக உள்ளது. இந்தத் திருவிழா அதைச் சரியாகச் செய்கிறது என்று கொரட்டூர் ஏரி பாதுகாப்பு மக்கள் இயக்கத்தின் தலைவர் சேகரன் கூறினார். மேலும் கொரட்டூர் ஏரி பாதுகாப்பு மக்கள் இயக்கத்திற்கு இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு ஆண்டும் தனித்துவமான ஒன்றைச் செய்வதாகவும், கடந்த ஆண்டு, பறவைகள் பற்றிய ஆவணப்படம் வெளியிடப்பட்டது என்றும் அவர் கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram