தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கூவக்காடு மலைவாழ் பழங்குடி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம்

31 May 2026, 10:13 pm
கூவக்காடு மலைவாழ் பழங்குடி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம்
<p><strong>கூவக்காடு மலைவாழ் பழங்குடி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம்</strong></p><p>ஆர்.செல்லசுவாமி எம்எல்ஏ உறுதி நாகர்கோவில், மே 31- சுருளகோடு ஊராட்சிக்கு உட்பட்ட கூவக்காடு மலைவாழ் பழங்குடி மக்கள் வசிக்கும் கிராமத்தில் மேல்நிலை குடிநீர் தொட்டி அமைத்து, பாதுகாக்கப்பட்ட குடி நீர் வழங்கப்படும் என்று பத்மநாபபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர். செல்ல சுவாமி உறுதி அளித்தார். சட்டமன்ற உறுப்பினர் ஆர். செல்லசுவாமி மே 31 ஞாயிறு அன்று மலைப்பகுதியான கூவக்காடு பரளியார், தச்சமலை உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளர்களை நேரில் சந்தித்து நன்றி கூறினார். 42 பழங்குடியின குடும்பங் கள் வசிக்கும் கூவக்காடு மலைக் கிராமத்தின் குடிதண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காணு மாறு அங்குள்ள மக்கள் கோரிக்கை விடுத்த னர். ஜல்ஜீவன் குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய்கள் பொருத்தப்பட்டிருந்தாலும் அவற் றில் தண்ணீர் வருவதில்லை. திறந்தவெளி கிணற்றில் பொருத்தப்பட்டிருக்கும் மின் மோட்டார் பழுதடைந்தது இதற்கு காரணம். அதை சீரமைத்து உடனடியாக தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர். கூவக்காடு கிராமத்தில் இருந்து 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள், சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வாழையத்து வயல் ஆதி திராவிடர் பழங்குடியினர் பள்ளி யில் படிக்கின்றனர். இதில். ஐந்தாவது வகுப் புக்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கு. போக்குவரத்து வசதி இல்லாததால் அவர்கள் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள காட்டை கடந்து செல்லும் நிலை உள்ளது. அனைத்து மாணவர்களுக்கும் பாதுகாப்பான பய ணத்தை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இதற்கு பதிலளித்த சட்டமன்ற உறுப்பி னர், அதிகாரிகளை தொடர்பு கொண்டு மின்மோட்டாரை பழுதுநீக்கி உடனடியாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறி னார். மேலும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி புதிதாக அமைத்து பாதுகாக்கப்பட்டு குடிநீர் கிடைக்கச் செய்வதாகவும் உறுதியளித் தார். மாணவர்கள் பாதுகாப்பாக பள்ளி சென்று வர நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித் தார். பரளியாறு அரசு ரப்பர் கழகத் தோட்டத் தில் பணியாற்றும் 350 சிஎல்ஆர் தொழிலா ளர்களுக்கு பணி நிரந்தரம் வேண்டுமென கேட்டுக்கொண்டனர். இதை அதிகாரிகள் மற்றும் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக கூறினார். பின்னர் பேச்சிப்பாறை அணையை படகில் கடந்து தச்சமலை கிராமத்திற்கு சென்று அங்குள்ள பழங்குடி மக்களுக்கு நன்றி தெரிவித்தார். சட்டமன்ற உறுப்பினருடன் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். சி ஸ்டா லின் தாஸ், குலசேகரம் வட்டார செயலாளர் சௌந்தர், மாவட்டக்குழு உறுப்பினர் பி விஸ்வாம்பரன், மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட நிர்வாகி ரெகு, தோட்டத் தொழிலா ளர் சங்கத் தலைவர் நடராஜன், திமுக திரு வட்டார் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜான்சன், சுருளகோடு ஊராட்சி செயலாளர் சுரேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.