கூத்தங்குழியில் மீன் வரத்து அதிகரிப்பு: உரிய விலை இல்லாததால் மீனவர்கள் கவலை
8 Oct 2026, 10:55 pm
<p><strong>கூத்தங்குழியில் மீன் வரத்து அதிகரிப்பு: உரிய விலை இல்லாததால் மீனவர்கள் கவலை </strong></p><p>திருநெல்வேலி,அக். 8-நெல்லை மாவட்டம் கூத்தங்குழியில் மீன் வரத்து அதிகரித்ததால் மீன் விலை குறைந்தது. அதனை வாங்க வியாபாரிகள் ஆர்வம் காட்டாததால் விற்பனையும் குறைந்தது. இதனால் மீனவர்கள் கவலையடைந்தனர். </p><p>கூடங்குளம் சுற்றியுள்ள கடற்கரை பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மத்தி மீன் என்ற பேய் சாளை மீன்கள் ஏராளமாக கிடைத்தன. ஆனால் எதிர்பார்த்த அளவில் மீன்களை சில்லரை மற்றும் மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படவில்லை. மீன்கள் வரத்து அதிகரித்ததால் கிலோ ரூ. 40 முதல் ரூ. 50 வரை விற்பனையானது. இதனால் மீன் விற்பனைக்கூடங்களில் மீன்கள் தேங்கியதால் மீனவர்கள் கவலையடைந்தனர். இது சம்பந்தமாக அப்பகுதி மீனவர்கள் கூறுகையில், “மீன்பிடி தடைக்காலங்களில் அரசு உதவித்தொகை வழங்குவது போல மீன் வரத்து அதிகமாக இருக்கும் காலங்களில் வியாபாரிகளை எதிர்பார்க்காமல் அரசே நேரடியாக கொள்முதல் செய்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்” என்று தெரிவித்தனர்</p>
