தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கூரம்பாக்கத்தில் தரமற்ற தொகுப்பு வீடுகள்! நடவடிக்கை கோரும் இருளர் இன மக்கள்

15 May 2026, 1:13 am
கூரம்பாக்கத்தில் தரமற்ற தொகுப்பு வீடுகள்!  நடவடிக்கை கோரும் இருளர் இன மக்கள்
<p><strong>கூரம்பாக்கத்தில் தரமற்ற தொகுப்பு வீடுகள்! நடவடிக்கை கோரும் இருளர் இன மக்கள்</strong></p><p>திருவள்ளூர், மே 14- கூரம்பாக்கத்தில் தாழ்வான பகுதியில் இருளர் இன மக்களுக்குகென அரசு பணத்தில் தொகுப்பு வீடுகளை தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதை விசாரணை செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் எல்லாபுரம் ஒன்றிய மாநாடு வியாழனன்று (மே 14), பெரியபாளையத்தில் நடைபெற்றது. அண்ணாநகர் சரோஜா தலைமை தாங்கினார். சுகுணா வர வேற்றார். இதில் மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில தலைவர் பி.டில்லிபாபு சங்கத்தின் &quot;கடமைகளும், சவால்களும்&quot; என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார். இதில் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜி.சின்னதுரை, மாவட்ட செயலாளர் ஆர்.தமிழ்அரசு, மாவட்ட பொருளாளர் டி.செஞ்சியம்மாள், மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ.பத்மா, விதொச மாவட்ட பொருளாளர் என்.கங்காதரன், மலைவாழ் மக்கள் சங்கத்தின் ஒன்றிய நிர்வாகிகள் சேகர், ராமன், விஜயலட்சுமி, கௌரி, அமிர்தவள்ளி ஆகியோர் பேசினர். மாநாட்டில் செஞ்சிஅகரம், தொம்பரம்பேடு, மஞ்சாங்கரணை, திருக்கண்டலம், பணப்பாக்கம், இலட்சி வாக்கம், செங்காத்தாகுளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து பழங்குடி இன மக்கள் கலந்து கொண்டனர். நிர்வாகிகள் தேர்வு 13 பேர் கொண்ட ஒன்றியக் குழுவின் தலைவராக எம்.திருப்பதி, செயலாள ராக கே.சுகுணா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.