முந்தய பக்கம்

கூடி வாழ்வோம்! - (கீரப்பாளையம் கோ-நெடுமாறன்)

6 Jun 2026, 8:54 pm
கூடி வாழ்வோம்! -  (கீரப்பாளையம் கோ-நெடுமாறன்)
<p><strong>கூடி வாழ்வோம்! - (கீரப்பாளையம் கோ-நெடுமாறன்)</strong></p><p>கண்ணே! மணியே! கற்கண்டே கண்ணுக் கினிய பூச்செண்டே பெண்ணாய்ப் பிறந்து மகிழ்வளித்தாய் பெண்கள் உயரும் வழியமைப்பாய்! கண்டதை யெல்லாம் கற்காதே கருத்தால் ஆய்ந்துக் கற்றிடுவாய் உண்மை எதுவோ அதைநம்பு உயர்ந்த அறிவே பகுத்தறிவு! கற்பவை கற்றபின் அதன்வழியே கற்றதை வாழ்வில் பின்பற்று கற்பதில் உயர்ந்தது திருக்குறளே கண்ணாய்ப் போற்றுக் குறளமுதை! நாளும் நல்லதைச் செய்திடு நன்றெனப் பட்டதைச் சொல்லிடு நாளொரு குறளைப் படித்திடு நன்மை பெற்றே உயர்ந்திடு! இன்னொரு வர்க்கு இடையூறாய் இருப்பதை என்றும் விரும்பாதே தன்னலம் இன்றி வாழ்ந்திடுவாய் தகைசால் தமிழாய் உயர்ந்திடுவாய்! ஆடிப் பாடி விளையாடு அதனுள் ஒற்றுமை நீதேடு கூடி வாழ்ந்திட வேண்டுமென குவலய மக்களுக்(கு) உணர்த்திவிடு! </p>
Share
FacebookXWhatsAppTelegram