தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

குமாரபாளையத்தில் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை

1 Jun 2026, 11:41 pm
குமாரபாளையத்தில் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை
<p><strong>குமாரபாளையத்தில் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை</strong></p><p>நாமக்கல், ஜூன் 1- நாமக்கல் மாவட்டம், குமார பாளையத்தில் இரண்டு சிறுமிக ளுக்கு பாலியல் தொல்லை அளிக் கப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, குற்றவாளிகளை தங்க ளிடம் ஒப்படைக்கக் கோரி பொது மக்கள் சாலை மறியல் மற்றும் காவல் நிலைய முற்றுகை போராட் டத்தில் ஈடுபட்ட சம்பவம் பர பரப்பை ஏற்படுத்தியது. குமாரபாளையம் அருகே உள்ள பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமியை, அப்பகுதியைச் சேர்ந்த மணி(62) என்பவர் ஐஸ்கிரீம் வாங் கித் தருவதாகக் கூறி அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் வீடு திரும் பும் வழியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர்கள் மணியை தேடியுள்ளனர். பின்னர் மணியை கண்டுபிடித்து தாக்கிள்ளனர். காய மடைந்த அவர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட் டது. இதற்கிடையில், குமாரபாளை யம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் 3.5 வயது குழந்தை பாலியல் தொல்லைக்கு ஆளான தாக மற்றொரு புகார் எழுந்தது. குழந்தை உடல்நலக்குறைவு இருப் பதாக கூறியதைத் தொடர்ந்து மருத் துவமனைக்கு அழைத்துச் செல்லப் பட்டபோது, காயம் இருப்பது தெரி யவந்தது. இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி, சந்தேகத்தின் பேரில் வரதராஜ்(59) என்பவரை கைது செய்து காவல் நிலையத் துக்கு அழைத்து வந்தனர். குற்றம் சாட்டப்பட்ட நபரை காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தபோது, குழந்தையின் உறவி னர்கள் மற்றும் பொதுமக்கள் அவரை தாக்க முயன்றனர். போலீ சார் அவரை பாதுகாப்பாக காவல் நிலையத்திற்குள் அழைத்துச் சென்றனர். இதனால், ஆவேசம டைந்த பொதுமக்கள், குற்றவா ளியை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கோரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு தரப்பினர் குமாரபாளை யம் காவல் நிலையம் முன்பும், மற்றொரு தரப்பினர் பள்ளிபாளை யம் பிரிவு சாலையிலும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற் படாமல் தடுக்க மாவட்ட எஸ்.பி. விமலா தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு படுத்தப்பட்டனர். பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், குற்றவாளிக ளுக்கு எதிராக விரைந்து சட்ட நட வடிக்கை எடுத்து கடுமையான தண் டனை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த னர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்ற னர். காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற்ற இந்த போராட்டம் காரணமாக குமார பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரபரப்பாக காணப்பட் டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.