தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

குடிநீர் வழங்க பாரபட்சம் காட்டும் பேரூராட்சி விதொச முற்றுகை போராட்டம்

20 Jul 2026, 11:37 pm
குடிநீர் வழங்க பாரபட்சம் காட்டும் பேரூராட்சி  விதொச முற்றுகை போராட்டம்
<p><strong>குடிநீர் வழங்க பாரபட்சம் காட்டும் பேரூராட்சி விதொச முற்றுகை போராட்டம்</strong></p><p>உடுமலை, ஜூலை 20 - பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிக்கு குடிநீர் வழங்கா மல் பாரபட்சம் காட்டும் கொமரலிங்கம் பேரூராட்சி நிர்வா கத்தைக் கண்டித்து, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் கள் சங்கம் சார்பில் திங்களன்று பேரூராட்சி அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. மடத்துக்குளம் தாலுகா, கொமரலிங்கம் பேரூராட்சிக்குட் பட்ட பெருமாள்புதூர் ஜெ.ஜெ. நகரில் பட்டியலின மற்றும் பழங்குடியினத்தவர் ஐந்தாயிரத்திற்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு பேரூராட்சி நிர்வாகம் முறையாக குடிநீர் வழங்காமல் பாரபட்சம் காட்டுவதால் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனைக் கண்டித்தும், ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தியும், கடந்த வாரம் போராட்டம் நடத்திய போது வட்டாச்சியர் காவல்துறையினர் நடத்திய பேச்சு வார்த்தையில் இரண்டு வாரங்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி தரப்பட்டது. ஆனால் எவ்வித முன்னேற்றமும் இல்லை. இதனையடுத்து விதொச தாலுகா செயலாளர் ஆறுமுகம் தலைமையில் பொதுமக்கள் காலி குடங்களுடன் திரண்டு வந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடு பட்டனர். இதில் சங்க நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், சக்தி வேல், ராஜா உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையி னர் மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி னர். இனிவரும் நாட்களில் முறையாக குடிநீர் வழங்கவும், கூடுதலாக பொதுக் குழாய்கள் அமைக்கவும் உறுதியளித் ததைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப் பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.