கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டப் பணி துவக்கம்
7 Mar 2026, 2:36 pm
<p><strong>கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டப் பணி துவக்கம் </strong></p>
<p>பாபநாசம், மார்ச் 7 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம், அம்மாபேட்டை ஒன்றி யங்களைச் சேர்ந்த 252 கிராமங்கள் பயன்பெறும் வகை யில் ரூ.288 கோடி மதிப்பிலான கொள்ளிடம் கூட்டுக் குடி நீர் திட்ட பணியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் துவக்கி வைத்தார். இதற்கான நிகழ்ச்சி பாபநாசம் அருகே தேவராயன் பேட்டையில் நடந்தது. இதில் அம்மாபேட்டை திமுக வடக்கு ஒன்றிய செயலர் சுரேஷ், குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் ஜெயக்குமார், நிர்வாகப் பொறி யாளர்கள் நடராஜன், ராணி, உதவி நிர்வாகப் பொறியாளர்‍ ராஜாபரத், உதவிப் பொறியாளர்கள் கிறிஸ்டின், ஏசுதாஸ், பிரிதிவ்ராஜ், திட்ட மேலாளர்கள் சங்கர், மகேந்திரன் உட்பட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.</p>
