குதிரைச் சாலையை தார்ச்சாலையாக மாற்றிடுக
14 Jun 2026, 1:44 am
<p><strong>குதிரைச் சாலையை தார்ச்சாலையாக மாற்றிடுக</strong></p><p>நாமக்கல், ஜூன் 13- கொல்லிமலை பழங்குடியின மக்களின் பொருளா தாரத்தை மேம்படுத்தவும், பயண நேரத்தைக் குறைக்கவும் குழிப்பட்டி - எருமபட்டி மாற்றுப் பாதையை தார்ச்சாலையாக தரம் உயர்த்தக் கோரி, சேந்தமங்கலம் தொகுதிக்குட்பட்ட கிராம மக்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளியன்று மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கொல்லிமலை வட்டம் சேலூர் நாடு, தின்னனூர் நாடு, தேவனூர் நாடு ஆகிய பகுதி களில் 4,000-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 15,000-க்கும் அதிகமான பொதுமக்கள் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியிலிருந்து சமவெளிப் பகுதி மற்றும் மாவட்டத் தலைநகருக்கு வர குறிப்பிட்ட நேர பேருந்துகளை நம்பி, சுமார் 90 கி.மீ தூரம் வரை 4 மணி நேரம் பயணிக்க வேண்டி யுள்ளது. இதனால் மாரடைப்பு, பிரசவம் போன்ற அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழப்புகள் நேரிடுகின்றன. மேலும், தற்போதைய நீண்ட பாதையால் கட்டுமானப் பொருட்களுக்கு அதிக வாடகை கொடுக்க வேண்டியுள்ளது டன், வியாபாரிகள் வராததால் விவசாயிகள் தங்கள் விளை பொருட்களைச் சொற்ப விலைக்கு விற்கும் அவலநிலை உள்ளது. இதற்கு தீர்வாக, சேலூர்நாடு குழிப்பட்டி முதல் எரும பட்டி வழியாக செல்லும் ‘குதிரை சாலை’ எனப்படும் மாற்றுப் பாதையை தார்ச்சாலையாக மாற்றினால் பயண தூரமும், வாடகையும் பாதியாக குறையும். சேலூர்நாடு மணப்பாறை சந்தையிலிருந்து இப்பாதைக்கு வெறும் 2 கி.மீ தூரமே உள்ளது. இச்சாலை அமைந்தால், புகழ்பெற்ற அரப்பளீஸ் வரர் கோயில் மற்றும் ஆகாயகங்கை நீர்வீழ்ச்சிக்கு 7 கி.மீ தூரத்தில் எளிதாகச் செல்ல முடியும். எனவே, மாவட்ட நிர்வா கம் இப்பாதையை உடனடியாகப் புனரமைத்துத் தர வேண் டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
