தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கொல்கத்தா கிடங்கு விபத்து பலியானோர் எண்ணிக்கை 15 ஆக உயர்வு!

26 Jun 2026, 8:04 pm
கொல்கத்தா கிடங்கு விபத்து  பலியானோர் எண்ணிக்கை  15 ஆக உயர்வு!

கொல்கத்தா கிடங்கு விபத்து பலியானோர் எண்ணிக்கை 15 ஆக உயர்வு!

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவின் தாராதலா பகுதியில் உள்ளது சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகப் பொறுப்புக் கழகம். அங்கு புதிதாக கட்டப்பட்டு வந்த சேமிப்பு கிடங்கின் கூரை ஜூன் 24 அன்று நள்ளி ரவு சுமார் 12:07 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. இந்த கோர விபத்தில் வேலை செய்துகொண்டிருந்த பல தொழிலாளர்கள் (60க்கும்மேற்பட்டோர்) இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.

விபத்து நடைபெற்ற இடத்தில் 3ஆவது நாளாகத் தேசிய பேரிடர் மீட்புப் படை, ராணுவம், கொல்கத்தா காவல்துறை இணைந்து தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இடி பாடுகளில் இருந்து இதுவரை மொத்தம் 33 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 11 பேர் சடலமாகவும், எஞ்சிய 18 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை இடிபாடுகளில் இருந்து மீட்கப் பட்ட 3 தொழிலாளிகளும் மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லும் வழியி லேயே உயிரிழந்துவிட்டனர். அதே போல வியாழக்கிழமை இரவு ஒரு தொழி லாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன்மூலம் 24 மணிநேரத்தில் 4 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. இந்தக் கோர விபத்து தொடர்பாக கிடங்கு கட்டப்பட்டு வந்த நிலத்தைக் குத்தகைக்கு எடுத்தவர், கட்டுமானக் கட்டமைப்புப் பொறியாளர் உள்ளிட்ட 6 பேரை கொல்கத்தா காவல்துறை கைது செய்துள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.