தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கொல்கத்தாவில் ரயில்வே பிளாட்பார வியாபாரிகளின் பிரம்மாண்ட போராட்டம் ‘மறுவாழ்வு இன்றி அகற்றக் கூடாது’ என சிஐடியு முழக்கம்!

13 Jun 2026, 9:05 pm
கொல்கத்தாவில் ரயில்வே பிளாட்பார வியாபாரிகளின் பிரம்மாண்ட போராட்டம் ‘மறுவாழ்வு இன்றி அகற்றக் கூடாது’ என சிஐடியு முழக்கம்!

கொல்கத்தாவில் ரயில்வே பிளாட்பார வியாபாரிகளின் பிரம்மாண்ட போராட்டம் ‘மறுவாழ்வு இன்றி அகற்றக் கூடாது’ என சிஐடியு முழக்கம்!

மேற்கு வங்கத்தில் ரயில் நிலையங்க ளில் உள்ள பிளாட்பார வியாபாரி களை (ரயில் ஹாக்கர்ஸ்) வலுக் கட்டாயமாக அகற்றும் ரயில்வே நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு எதிராக, கொல்கத்தாவில் உள்ள கிழக்கு ரயில்வே தலைமையகமான ‘பேர்லி பிளேஸ்’ (Fairlie Place) முன்பாக ஆயிரக்கணக் கான தொழிலாளர்கள் திரண்டு பிரம்மாண்ட கூட்டுப் போராட்டத்தை நடத்தினர்.

சிஐடியு மேற்கு வங்க மாநிலக் குழு, ரயில் ஹாக்கர்ஸ் யூனியன் மற்றும் ‘ஜூலை 12 கமிட்டி’ ஆகிய அமைப்புகளின் கூட்டு அமைப்பில் ஜூன் 10 அன்று இந்த முற்றுகைப் போராட்டம் நடை பெற்றது. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சாலை யில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் செங்கொடிகளுடன் திரண்டதால் அப்பகுதியே ஸ்தம்பித்தது. இப்போராட்டத்தில் சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜியாவுல் ஆலம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் டிஎஸ்எம்எம் (DSMM) மாநிலச் செயலாளருமான அலகேஷ் தாஸ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டு உரை யாற்றினர்.

நள்ளிரவில் புல்டோசர் அடக்குமுறை

மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்தே பிதான்நகர், சீல்டா, போங்கோன், சோனார்பூர், ஜாதவ்பூர் என மேற்கு வங்கம் முழு வதும் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) மற்றும் மத்திய ஆயுதப் போலீஸ் படையினரை ஏவி, வியாபாரி களை அகற்றும் ‘புல்டோசர்’ வேட்டையை ரயில்வே நிர்வாகம் நடத்தி வருகிறது.

சமீபத்தில் ஜாதவ்பூர் ரயில் நிலைய பகுதி யில் நள்ளிரவில் நடத்தப்பட்ட புல்டோசர் தரை மட்டமாக்கல் நடவடிக்கைக்கு எதிராகப் போராடிய சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் சுஜன் சக்ர வர்த்தி, எஸ்எப்ஐ பொதுச்செயலாளர் ஸ்ரீஜன் பட்டாச்சார்யா உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட தோ ழர்கள் காவல்துறையின் வன்முறைத் தாக்குத லில் காயமடைந்தனர்; பலர் கைது செய்யப் பட்டனர். இந்த மனிதாபிமானமற்ற நள்ளிரவுத் தாக் குதலை சிஐடியு வன்மையாகக் கண்டித்துள்ளது.

கார்ப்பரேட்டுகளுக்காக ஏழைகளின் வயிற்றில் அடி: தலைவர்கள் சாடல்

போராட்டத்தில் சிஐடியு மாநில பொதுச்செய லாளர் ஜியாவுல் ஆலம் பேசுகையில்,”முறையான நோட்டீஸ் இன்றி, நீதிமன்ற உத்தரவுகளையும் மதிக்காமல் நள்ளிரவில் புல்டோசர்களுடன் வந்து ஏழை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை ரயில்வே நிர்வாகம் அழிக்கிறது. உள்கட்ட மைப்பு நவீனமாக்கல் என்ற பெயரில் தொழி லாளர்களைத் துரத்துவது வளர்ச்சி அல்ல; அது வன்முறை. முறையான இடங்களை அடையாளம் கண்டு, வியாபாரிகளுக்கு மாற்று மறுவாழ்வு வழங்கிய பின்னரே எவ்வித நடவடிக்கையும் எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

முன்னாள் எம்.பி., அலகேஷ் தாஸ் பேசு கையில்,”1947 பிரிவினைக்குப் பிறகு அகதி களாக வந்த ஏழைக் குடும்பங்கள், இந்த ரயில்வே ஓரங்களில் சிறு வியாபாரங்கள் மூலம் தங்களின் உழைப்பால் இந்தச் சந்தைகளை உருவாக்கினர். இன்று இந்த பொது இடங்களை ரிலையன்ஸ், அதானி போன்ற பெருநிறுவனங்களின் வணிகக் கடைகளாக மாற்றுவதற்காக ஏழைகளின் வயிற்றில் ஒன்றிய பாஜக அரசு அடிக்கிறது. ரயில்வே ரயில்களில் இயங்கும் சமையல் கூடங் கள் தீ விபத்துக்கான ஆபத்தை ஏற்படுத்தாத போது, நடைபாதை வியாபாரிகளால் தீ விபத்து ஏற்படும் என்ற ரயில்வேயின் வாதம் வர்க்கப் பாசத்தையே காட்டுகிறது. தேர்தலுக்கு முன்பு ஒரு வியாபாரியைக் கூட அகற்ற விடமாட்டேன் என முழங்கிய மம்தா பானர்ஜியின் அரசும், தேர்தல் முடிந்ததும் இந்த கூட்டு வேட்டைக்குத் துணை நின்று துரோகம் இழைத்துள்ளது” எனக் குற்றம் சாட்டினார்.

சிஐடியு சார்பில், பெரிய கார்ப்பரேட் கடைக ளுக்குப் பதிலாக அதே இடத்தை சிறு கடைகளாகப் பிரித்து அனைத்து ஹாக்கர்களுக்கும் வழங்க வும், கூட்டு வாடகை செலுத்தவும் தயாராக இருப்ப தாக வழங்கப்பட்ட ஆக்கப்பூர்வமான மாற்றுப் பரிந்துரையை ரயில்வே வாரியம் நிராகரித்து இழுத்தடித்து வருகிறது.

​​​​​​நீதிமன்றத் தடையும் அடுத்தகட்டப் போராட்டமும்

ஏற்கெனவே ஹவுரா ரயில் நிலைய பகுதியில் ஹாக்கர்களை அகற்ற கொல்கத்தா உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்த நிலையில், தற்போது நடைபெற்ற விசாரணையில் நைஹாட்டி, டன்குனி, கொன்னகர் ஆகிய மூன்று ரயில் நிலையங்களிலும் ஜூன் 17 வரை வியாபாரிகளை அகற்ற நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பாதிக்கப்பட்ட வியாபாரிகள் சார்பில் மூத்த வழக்கறிஞரும் சிபிஐ(எம்) தலைவ ருமான பிகாஸ் ரஞ்சன் பட்டாச்சார்யா ஆஜராகி வாதாடினார்.

“மறுவாழ்வு இன்றி அகற்றம் இல்லை” என்ற முழக்கத்தோடு, இந்த அடக்குமுறைக்கு எதிராக வரும் ஜூலை 12 அன்று மேற்கு வங்கம் தழுவிய அளவில் அனைத்துப் பிரிவு தொழிலா ளர்களையும் திரட்டி பிரம்மாண்ட மாநில அள விலான போராட்டத்தை சிஐடியு நடத்தியுள்ளது.

(தி லெப்ட் வியூஸ்)

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.