தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மேற்குவங்க பாஜக அரசின் புல்டோசர் அடாவடிக்கு கண்டனம் கொல்கத்தாவில் புத்தகங்களுடன் எழுத்தாளர்கள், மாணவர்கள் நடைபயண பேரணி!

1 Nov 2026, 9:31 pm
மேற்குவங்க பாஜக அரசின் புல்டோசர் அடாவடிக்கு கண்டனம்  கொல்கத்தாவில் புத்தகங்களுடன் எழுத்தாளர்கள், மாணவர்கள் நடைபயண பேரணி!

மேற்குவங்க பாஜக அரசின் புல்டோசர் அடாவடிக்கு கண்டனம்

கொல்கத்தாவில் புத்தகங்களுடன் எழுத்தாளர்கள், மாணவர்கள் நடைபயண பேரணி!

கொல்கத்தாமேற்குவங்க மாநிலத்தில் துர்கா பூஜை திருவிழாவின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகளின் புத்தகக் கடைகளை பாஜக அரசு இடித்துத் தள்ளியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிபிஎம் வலுவான போராட்டங் களை நடத்தியது.

ஜாதவ்பூர் உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்ற போராட் டத்தில் பொதுமக்களும் திரளாக இணைந்தனர். வழக்கமாக துர்கா பூஜையின் போது சிபிஎம் புத்தகக் கடைகளுக்குச் செல்லாத பலர் கூட, இம்முறை ஆதரவு தெரிவிக்கும் வகையில் சென்று புத்கங்களை வாங்கினர். இதனால் வரலாறு காணாத வகையில் புத்தகங்கள் விற்பனையானதாக சிபிஎம்தலைவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், புத்தகக் கடைகளை இடித்த பாஜக அரசின் அடாவடியைக் கண்டித்து, சனிக்கிழமையன்று கொல்கத்தாவின் கல்லூரி சதுக்கத்தில் ‘புத்தகங்களுக்கான நடைபயணம்’ என்ற தலைப்பில் மாபெரும் பேரணி நடைபெற்றது. எழுத்தாளர்கள், கலைஞர்கள், கல்வியாளர்கள், சிந்தனையாளர் கள், மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

சிபிஎம் மாநிலச் செயலாளர் முகமது சலீமும், மத்தியக் குழு உறுப்பினர் சுஜன் சக்கரவர்த்தியும் பேரணியில் பங்கேற்றார். அதே சமயம், அண்மையில் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட 75 வயதான ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஜவஹர் சர்க்கார், 90 வயதான ரவீந்திர பாரதி பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பபித்ரா சர்க்கார் ஆகியோரும் பேரணியில் பங்கேற்றனர்.

பேரணியில் பங்கேற்றோர் ரவீந்திரநாத் தாகூர், அம்பேத்கர், பகத்சிங், சரத்சந்திரர், சத்யஜித் ரே, அருந்ததி ராய், உமர் காலித் ஆகியோரின் புத்தகங்களைக் கையில் ஏந்தி “புத்தகக் கடைகளை இடித்து, வாசிப்புப் பழக்கத்தைச் சீர்குலைக் கும் முயற்சிகளை மேற்கொள் ளாதே!”, “புத்தகங்களுக்கு எதிராகப் புல்டோசர் நடவடிக்கை வேண் டாம்!”, “புத்தகங்களை எரிக்காதீர் கள், புத்தகங்களைப் படியுங்கள்!” உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினர். இதனால் கொல்கத்தா வீதிகள் அதிர்ந்தன.

“நாஜி ஜெர்மனியாக மாற அனுமதிக்கக் கூடாது!” - பேரணியில் எழுந்த குரல்கள்பேரணியைத் தொடர்ந்து மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பபித்ரா சர்க் கார் பேசுகையில், “என்னால் இனி நடக்க முடியாது. ஆனால் இந்த பிற்போக்குத்தனமான கலாச்சாரத்தை எதிர்த்து நான் போராட வேண்டும் என்று நினைத்தேன். இந்தப் போராட்டம் வெறும் கட்சி அரசியலைச் சார்ந்தது அல்ல; மேற்கு வங்கத்தை நாஜி ஜெர்மனியாக மாற நாம் அனுமதிக்கக் கூடாது என்பதற்காகவே!” என்றார்.

அதேபோல ஜவஹர் சர்க்கார் பேசுகையில், “துர்கா பூஜையின் போது புத்தகக் கடைகள் இவ்வாறாக அழிக்கப்படுவது ஜெர்மனியில் ஹிட்லர் செய்ததை நினைவூட்டுகிறது. இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. 200 ஆண்டுகளுக்கும் மேலாகப் புத்தகங்களுடன் வங்காளத்திற்குப் பிரிக்க முடியாத தொடர்பு உள்ளது. புத்தகங்கள் மூலமே நாம் மூடநம்பிக்கைகளுக்குச் சவால் விடுத்துப் பகுத்தறிவை ஏற்றுக் கொண்டோம்” எனக் குறிப்பிட்டார்.

அரசியல் ஆய்வாளர் மைதுல் இஸ்லாம் பேசுகையில், “புத்தகக் கடைகள் மீதான தாக்குதல் குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயல். புத்தகங்களையும் புத்தகக் கடைகளையும் அழிக்கும் சமூக விரோதிகளைத் தடுக்க முயன்ற குடிமக்கள் மீதானகோழைத்தனமான தாக்குதலுக்கு எதிரானதே இப்போராட்டம்” எனத் தெரிவித்தார்.

ஜாதவ்பூர் பல்கலைக்கழக மாணவர் அனுபவ் குப்தா பேசுகையில், “மேற்கு வங்கம் இதுபோன்ற ஒரு போராட்டத்தைக் கண்டதில்லை. புத்தக விரும்பிகளுக்கும், எதிர்ப்பையும் மாற்றுக் கருத்துகளையும் வெளிப்படுத் தும் ஆற்றலுக்கும் பெயர் பெற்ற கொல்கத்தா நகரில் இது கேள் விப்படாத ஒன்று. புத்தகக் கடைகளை இடிப்பதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்!” என்று உறுதியளித்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.