கொல்கத்தா அரசு மருத்துவமனை பயிற்சி மருத்துவர்கள் மீது பாஜக ஆதரவாளர்கள் தாக்குதல்!
yesterday
<p>மேற்கு வங்கத்தில் அரசு மருத்துவமனையின் குறைபாடுகள் குறித்து ஊடகங்களிடம் பேசிய 8 பயிற்சி மருத்துவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டதை கண்டித்து போராடிய மருத்துவர்கள் மீது ஆளும் கட்சியுடன் தொடர்புடையவர் சிலர் மருத்துவக் கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்து மாணவர்களை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>மேற்கு வங்கத்தில் பாஜக அரசு பொறுப்பேற்று ஆறு மாதங்களே ஆன நிலையில், அரசு மருத்துவமனையில் நிலவும் குறைபாடுகள் மற்றும் நோயாளிகளைத் தனியார் மருத்துவமனைக்கு மாற்றியது குறித்து ஊடகங்களிடம் தெரிவித்த 8 பயிற்சி மருத்துவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.</p><p>இதைத் திரும்பப் பெறக் கோரி மருத்துவ மாணவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், நவம்பர் 18-ஆம் தேதி இரவு கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்திற்குள் புகுந்த ஒரு கும்பல், பயிற்சி மற்றும் இளநிலை மருத்துவர்களைக் கடுமையாகத் தாக்கியது. தாக்குதல் நடத்தியவர்கள் ஆளும் கட்சியுடன் தொடர்புடைய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் எனப் பாதிக்கப்பட்ட மருத்துவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.</p><p>இந்தத் தாக்குதலில் 6 பயிற்சி மருத்துவர்களுக்குத் தலையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இறுதியாண்டு மருத்துவ மாணவரான சயான் சபூய் என்பவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
