“கொடுங்கையூரில் எரிவது குப்பைகள் அல்ல, மனித உரிமை” எரிஉலை திட்டத்தை கைவிட வடசென்னை வாசிகள் கோரிக்கை
11 Jun 2026, 11:40 pm

“கொடுங்கையூரில் எரிவது குப்பைகள் அல்ல, மனித உரிமை” எரிஉலை திட்டத்தை கைவிட வடசென்னை வாசிகள் கோரிக்கை

சென்னை, ஜூன் 11- கொடுங்கையூரில் அமைக்க முன்மொழியப்பட்டுள்ள 2100 டன் திறன் கொண்ட மெகா கழிவு எரி உலை திட்டத்தை பெருநகர சென்னை மாநகராட்சி உடனடி யாக கைவிட வேண்டும் என்றும், அதற்கு மாற்றாக ‘பசுமை சென்னை க்கான முன்னெடுப்பு’ திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் வட சென்னை குடியிருப்போர் நலச்சங் கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தி யுள்ளது. இது தொடர்பாக, சென்னை மாந கராட்சி ஆணையர் சமீரனை சந்தித்து கூட்டமைப்பின் தலைவர் டி.கே.சண்முகம், பொதுச்செயலா ளர் ஆர்.ஜெயராமன் மற்றும் நிர் வாகிகள் விரிவான கள ஆய்வறிக்கை மற்றும் பரிந்துரைகளுடன் கூடிய மனு அளித்தனர். பின்னர் டி.கே.சண்முகம் செய்தி யாளர்களிடம் கூறுகையில், கொடு ங்கையூர் குப்பை வளாகத்தில் கடந்த 6 ஆண்டுகளாக செயல் பட்டு வந்த 50 டன் கழிவு எரி உலை ஆலை, மக்களின் கடும் எதிர்ப்பு மற்றும் பாதுகாப்பற்ற செயல் பாடுகள் காரணமாக தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்த ஆலை இயங்கியபோது, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான எழில் நகர் (ஏ & பி பிளாக்), எம்ஜிஆர் நகர், அன்னை சத்யா நகர், சந்திரசேகர் நகர், நேதாஜி நகர் மற்றும் ஆர்.ஆர். நகர் ஆகிய பகுதிகளில் குடியிருப்போர் சங்க கூட்டமைப்பு சார்பில் விரிவான உடல் ஆரோக்கியம் குறித்த கள ஆய்வு நடத்தப்பட்டது.

ஆரோக்கியம் பாதிப்பு

இந்த ஆய்வில் அப்பகுதி மக்க ளின் உடல் ஆரோக்கியம் கடுமை யாகச் சிதைக்கப்பட்டு, வேலை இழப்புகள் மற்றும் பொருளாதார இழப்புகளால் அவர்களின் வாழ் வாதாரம் நிலைகுலைந்து போயி ருப்பது போன்ற அதிர்ச்சியூட்டும் மனித உரிமை மீறல் விவரங்கள் தெரிய வந்தன.

தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு பரிந்துரைகள்

: கழிவிலிருந்து மின்சாரம் தயாரி க்கும் தொழில்நுட்பம் சர்வதேச உடன்படிக்கைகளுக்கும், இந்திய அரசியலமைப்பின் கீழ் (பிரிவு 14, 15, 19, 21) உறுதி செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கும் எதி ரானது என்பதால், இதை ‘மனித உரிமை மீறல்’ என தேசிய மனித உரிமைகள் ஆணையம் அதிகாரப் பூர்வமாக அறிவிக்க வேண்டும். மேலும், மத்திய சுற்றுச்சூழல் அமை ச்சகம் எரிஉலை நிலையங்களை ‘சிவப்பு’ வகையிலிருந்து ‘நீலம்’ வகையாக மாற்றிய மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் வகைப்பாட்டைத் திரும்பப் பெற வேண்டும்.

எரி உலைக்கான இலக்கை ரத்து செய்க 2050க்குள்

இந்தியா முழுவதும் 550 எரிஉலை நிலையங்களை அமைக்கும் தேசிய இலக்கை ரத்து செய்ய வேண்டும். தில்லி, தமிழ் நாடு, குஜராத், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இயங்கும் எரிஉலை களின் மனித உரிமை மீறல்களை ஆணையம் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும்.

தமிழக அரசுக்கான கோரிக்கைகள்

கொடுங்கையூரில் தற்காலிக மாக மூடப்பட்டுள்ள 50 டன் எரிஉலையை நிரந்தரமாக மூட வேண்டும். மேலும், கொடுங்கை யூரில் முன்மொழியப்பட்டுள்ள 2,100 டன் திட்டம், தாம்பரத்தில் முன் மொழியப்பட்டுள்ள 1,500 டன் திட்டம் மற்றும் கோயம்புத்தூர் எரிஉலை திட்டம் ஆகிய அனைத்து புதிய எரி உலை திட்டங்களையும் முழுமை யாக ரத்து செய்ய வேண்டும். எரி உலை மாசுகளால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு இலவச மற்றும் சிறப்பு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

அரசு மருத்துவமனை

வடசென்னை தொழில்துறை பகுதிகளில் வாழும் மக்களின் நலனு க்காக பெரம்பூரில் புதிய அரசு புற நகர் மருத்துவமனை ஒன்றை நிறுவ வேண்டும். கழிவுகளை எரிப்பதற் குப் பதிலாக, மூலத்திலேயே கழிவு களை தரம் பிரித்தல், மறுசுழற்சி, பரவலாக்கப்பட்ட உரமாக்கல், உயிரிவாயு தயாரிப்பு மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கான வாழ்வாதார பாதுகாப்பு ஆகிய வற்றை உள்ளடக்கிய மாற்றுத் திட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும். வடசென்னையின் பெரும் துயரமாக மாறியுள்ள இந்த கொடு ங்கையூர் குப்பை வளாகப் பகுதி முதலமைச்சரின் தொகுதியாகவும், இதனால் அதிகம் பாதிக்கப்படும் சுற்றுவட்டாரப் பகுதி நிதி அமை ச்சரின் தொகுதியாகவும் உள்ளன. உலகில் எந்த ஒரு முன்னேறிய தொழில்நுட்பமும் கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் காற்று மற்றும் நிலத்தடி நீர் மாசுபாட்டையோ, மனித உடல் நலம் பாதிப்பையோ தடுக்க முடியவில்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எரிவது குப்பைகள் மட்டுமல்ல, மனித உரிமையும் சேர்ந்தே எரி கிறது. எனவே, வடசென்னை மக்க ளின் அச்சத்தையும் அதிருப்தியை யும் போக்கும் வகையில், சென்னை மாநகராட்சியும், தமிழக அரசும் இந்த ஆபத்தான எரிஉலை திட்டங் ங்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினோம்.

முழுமையாக கைவிடுக

சுற்றுச்சூழல் அனுமதியைப் பெற்ற பிறகு, பொதுமக்களின் கருத்து கேட்புக்கு ஏற்பாடு செய்கி றோம். அதன் பிறகு இத்திட்டத்தை அமலாக்குவதா? கை விடுவதா? என்பதை பரிசீலிப்போம் என்று தெரிவித்தார். ஆணையர் தெரி வித்த கருத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்றும், இந்த திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி யுள்ளோம் என்று டி.கே.சண்முகம் கூறினார். இச்சந்திப்பின் போது, பொரு ளாளர் ஆர்.பொன்னுசாமி, நிர்வாகி கள் எஸ்.ஏ.வெற்றி ராஜன், கே.நம்மாழ்வார், வழக்கறிஞர் மது வந்தி, ஜியோ டாமின், ஃபெமா மோகன், சரவணன் (வர்த்தகர் சங்கம்), பரமசிவம், சந்துரு ஆகி யோர் உடன் இருந்தனர்.