தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கொடுங்கையூர் எரிஉலை சுற்றுச்சூழல் விதி மீறல்கள்! மக்கள் நல அமைப்புகள் ஆய்வறிக்கை வெளியீடு

16 Feb 2026, 2:37 pm
கொடுங்கையூர் எரிஉலை சுற்றுச்சூழல் விதி மீறல்கள்!  மக்கள் நல அமைப்புகள் ஆய்வறிக்கை வெளியீடு
<p><strong>கொடுங்கையூர் எரிஉலை சுற்றுச்சூழல் விதி மீறல்கள்! &nbsp;மக்கள் நல அமைப்புகள் ஆய்வறிக்கை வெளியீடு</strong></p> <p>சென்னை, பிப். 16- எரி உலையற்ற சென்னைக்கான கூட்டமைப்பு மற்றும் வடசென்னை குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பு இணைந்து சென்னை கொடுங்கையூர் பகுதியில் உள்ள 50 மெட்ரிக் டன் குப்பை எரி உலையின் சுற்றுசூழல் விதிமீறல்கள் குறித்த ஆய்வறிக்கை திங்களன்று (பிப். 16) சென்னையில் வெளியிடப்பட்டன. வடசென்னை குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் டி.கே.சண்முகம் உண்மை அறியும் குழுவின் அறிக்கையை வெளியிட பேராசிரியர் எஸ்.ஜனக ராஜன் பெற்றுக் கொண்டார். அதில், திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016இன் படி கண்காணிக்கப்பட வேண்டிய 48 காரணிகளில் 45 காரணிகள் (சுமார் 90%) ஒருமுறை கூட பரி சோதிக்கப்படவில்லை. 11 புகை வெளியீட்டு அளவுகளில் 8 அளவுகள் ஒரு முறை கூட ஆராயப்படவில்லை. மீதமுள்ள 3 அளவுகள் கடந்த 5 ஆண்டுகளில் ஒரே ஒரு முறை மட்டுமே (26.04.2024) பரிசோதிக்கப்பட்டுள்ளன. எரிவுலையில் இருந்து வெளி யேறும் கசிவு நீர் மற்றும் நச்சுத்தன்மை வாய்ந்த சாம்பல் ஆகியவை குறித்து எந்த வொரு முறையான ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை. லடயாக்சின், ஃப்யூரான் போன்ற ஆபத்தான வாயுக்களைக் கட்டுப்படுத்தும் நவீன கருவிகள் இங்கு இல்லை. மேலும், ஆன்லைன் மாசு கண்காணிப்பு அமைப்பு நிறுவப்படவில்லை. மூச்சுத்திணறல், ஆஸ்துமா, தோல் மற்றும் கண் எரிச்சல் போன்றவை அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்ற னர். வீடுகளில் கருப்பு தூசி படி வதுடன், நிலத்தடி நீர் மற்றும் மண் மாசுபடுவதாக மக்கள் அச்சம் தெரி விக்கின்றனர் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. &nbsp; டி.கே. சண்முகம் பேட்டி &nbsp;இதுகுறித்து டி.கே.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறுகையில், உலகின் எந்த மூலையில் எரி உலை ஆலைகள் செயல்பட்டாலும், அதிலிருந்து வெளிவரும் நச்சுத்தன்மை அனுமதிக்கப்பட்ட அளவைவிட பல நூறு மடங்கு வெளியேறுகிறது என்ற உண்மை பல முறை உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தகைய நச்சுத் தன்மைகளால் ஒரு நகரமே விஷமாக மாறி, மக்களின் உயிருக்கும், ஆரோக்கியத்திற்கும் பெரும் ஆபத்து உருவாகிறது. மாநகராட்சியும், அரசும் கொண்டு வரக்கூடிய எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அந்த திட்டம் மக்களுக்கு பயன்படக் கூடியதாக இருக்க வேண்டும் என்பதுடன், இயற்கை வளங்களான காற்றை யும், மண்ணையும், நீரையும் பாதுகாப்பதாக அமைய வேண்டும். கொடுங்கையூரில் 50 டன் எரி உலையால் மட்டுமே இவ்வளவு பாதிப்புகள் என்றால் 2,100 டன் எரித்தால் எங்களது நகரம் விஷ நகரம் ஆகிவிடும் அல்லவா? இந்த திட்டத்தால் என்ன பயன் ஏற்படப்போகிறது? ரூ.3,600 கோடி திட்டம் என்பதால், இவற்றை ஒப்பந்தம் எடுத்திருக்கக் கூடிய நிறுவனங்கள் கோடிக்கணக்கில் லாபம் சம்பாதிக்க உதவுமே தவிர, மக்களுக்கு முழுக்க முழுக்க கெடுதலான திட்டம் இது. இவற்றை மணலி சின்னமாத்தூர் ஆலையில் நாங்கள் நிரூபித்து இருக்கிறோம்.ஐதராபாத்தில் உள்ள ஜவகர் நகர் எரிஉலை ஆலையிலும் இதே நிலைமைதான். தில்லி எரி உலையால் எவ்வளவு பெரிய பாதிப்பு என்பது ஊர் அறிந்த விஷயம் ஆகும். இதற்கு பிறகும் இந்தத் திட்டத்தை கொண்டு வரத்துடிப்பதும், இதற்காக சாலை அமைக்க 10.69 கோடி ரூபாய் ஒதுக்கி பணிகளை துவக்குகிற படுபாதகச் செயலை ஒரு மக்கள் நல அரசு செய்யக்கூடாது. பசுமை முன்னெடுப்பு &nbsp;திட்டத்தை அமல்படுத்துக எனவே கொடுங்கையூர் 50 டன் எரி உலை ஆலையை மூடுவது டன், 2100 டன் எரிப்பு என்ற திட்டத்தை யும் கைவிட்டு, நாங்கள் அளித்தி ருக்கக் கூடிய பசுமை சென்னை முன்னெடுப்பு என்ற சென்னைக்கான திடக்கழிவு மாற்று திட்டத்தை அரசு ஏற்று அமலாக்க வேண்டும். இந்த திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சரிடம் நேரடியாகவும் கொடுத்திருக்கிறோம். முதலமைச் சர் &nbsp;இந்த மாற்றுத் திட்டத்தை அம லாக்குவதற்கு சுயேட்சையான வல்லுநர் குழுவை அமைக்க வேண்டும். கொடுங்கையூர் 50 டன் எரி உலையை நடத்திக் கொண்டி ருக்கும் நிறுவனம் மீது விதிமீறல் குற்றத்திற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆறாண்டு காலம் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் அருகாமையில் குடி யிருக்கும் மக்களுக்கு சிறந்த மருத்துவ உதவிகளும், உரிய இழப்பீடும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இச்சந்திப்பின் போது சூழலி யலாளர்கள் டாக்டர் எஸ்.விஸ்வஜா, சுபஸ்ரீ, கூட்டமைப்பின் பொருளாளர் ஆர்.பொன்னுசாமி, அமைப்புச் செயலாளர் எஸ்.ஏ.வெற்றிராஜன், ஈர்நில ஆராய்ச்சியாளர் பிரசாந்த், மோகன் (ஃபெமா அறக்கட்டளை) &nbsp;ஆகியோர் உடன் இருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.