ஐநா மனித உரிமைகள் கவுன்சில் இணையதளத்தில் இடம்பெற்ற கொடுங்கையூர் எரிஉலை பாதிப்புகள்
12 hours before

ஐநா மனித உரிமைகள் கவுன்சில் இணையதளத்தில் இடம்பெற்ற கொடுங்கையூர் எரிஉலை பாதிப்புகள்

சென்னை, செப். 17-ஐநா மனித உரிமைகள் கவுன்சில் இணையதளத்தில் கொடுங்கையூர் “எரிந்துகொண்டிருக்கும் மனித உரிமைகள்” என்ற ஆய்வறிக்கை இடம்பெற்றுள்ளது.

வடசென்னை குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் டி.கே.சண்முகம் வெளியிட்டஅறிக்கையில் கூறியிருப்பதாவது:கொடுங்கையூர் குப்பை வளாகத்தைச் சுற்றியுள்ள 8 குடியிருப்பு பகுதிகளில், 50 டன் குப்பையை எரித்து மின்சாரம் தயாரிக்கும் எரிஉலையால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து பெமா அமைப்பு வீடு வீடாகச் சென்று ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வை கூட்டமைப்பு ஒருங்கிணைத்தது.ஆய்வறிக்கையை வழக்கறிஞர் மதுவந்தி தயாரித்தார்.

கடந்த மே மாதம் 2026-ல் ஆய்வறிக்கை ஐநா மனித உரிமைகள் கவுன்சிலுக்கு அனுப்பப்பட்டது. தமிழ்நாடு அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, மரிய வில்சன், சென்னை மாநகராட்சி ஆணையாளர் சமீரன் ஆகியோரிடமும் அறிக்கை வழங்கப்பட்டது.எரிஉலையைச் சுற்றி 2 கிலோமீட்டர்தூரத்துக்குள் உள்ள 8 பகுதிகளில் 415பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இதில்331 பேர், அதாவது 79.8 சதவீதம் பேர்,கடந்த 1 முதல் 2 ஆண்டுகளில் உடல்நலபாதிப்பு ஏற்பட்டதாக தெரிவித்தனர். அவர்களில் 309 பேர், 93.4 சதவீதம் பேர்,தங்களது பாதிப்புக்கு எரிஉலை புகையே காரணம் என தெரிவித்தனர். தலைவலி, தோல் பாதிப்பு, கண்களில் நீர்வடிதல் உள்ளிட்ட பாதிப்புகள் பதிவாகின.

இந்த ஆய்வுத் தகவல்கள் ஐநாகாலநிலை மாற்ற சிறப்பு அறிக்கையாளர் மற்றும் மனித உரிமைகள் கவுன்சில் ஆலோசனைக் குழுவின் தகவல் சேகரிப்பு நடவடிக்கைகளுக்குஅனுப்பப்பட்டுள்ளன. தற்போது ஆய்வறிக்கை ஐநா இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

புதிய எரிஉலை திட்டங்களுக்கு முன்பு உடல்நலம், சுற்றுச்சூழல், வாழ்வாதாரம், மனித உரிமைகள் மீதானபாதிப்புகளை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களை திட்டமிடல் மற்றும் முடிவெடுப்பில் பங்கேற்கச் செய்ய வேண்டும். கொடுங்கையூரில் முன்மொழியப்பட்ட எரிஉலை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.