தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கொடுமணல் பகுதியில் மாணவர்கள் கல்விச் சுற்றுலா

10 Oct 2026, 3:14 am
கொடுமணல் பகுதியில் மாணவர்கள் கல்விச் சுற்றுலா

கொடுமணல் பகுதியில் மாணவர்கள் கல்விச் சுற்றுலா

ஈரோடு, அக்.9-அகழாய்வு நடைபெற்று வரும் கொடுமணல் பகுதியில்,பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கல்விச் சுற்றுலா மேற்கொண்டனர்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், கொடுமணல்அகழாய்வுத் தளத்தில், தொல்லியல் தளங்கள் மற்றும் நினைவுச்சின்னங்களை பாதுகாத்தல், பராமரித்தல் மற்றும்அவற்றின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வு மாவட்ட நிர்வாகம் மற்றும் தொல்லியல் துறைசார்பில் நடைபெற்றது. இதனையொட்டி மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி தலைமையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கல்விச் சுற்றுலா மேற்கொண்டனர். சங்க காலத்தில் கொடுமணல் சிறந்து விளங்கிய தொன்மையான வாழ்விடமாகவும், தொழில் மற்றும் வணிக மையமாகவும் விளங்கியதற்கான தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ள சிறப்புமிக்க இடமாகும். இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் பழங்கால மக்களின் வாழ்வியல் முறை, மணிகள் தயாரித்தல், இரும்பு உள்ளிட்ட உலோகப் பயன்பாடு, அணிகலன்கள் தயாரித்தல் மற்றும் வணிகத் தொடர்புகள் குறித்த சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. இச்சான்றுகள் அக்காலத் தமிழர்களின் தொன்மை, தொழில்நுட்ப அறிவு மற்றும் வணிகத் திறனைஎடுத்துரைக்கின்றன.

இக்கல்விச் சுற்றுலா மூலம் மாணவ, மாணவியர்கள் பாடப்புத்தகங்களில் படிக்கும் வரலாற்று செய்திகளை நேரடியாக களத்தில் அறிந்துகொள்ளவும், தமிழர்களின் தொன்மையான நாகரிகம், பண்பாடு மற்றும் பாரம்பரியத் தொழில்நுட்பங்களை புரிந்துகொள்ளவும் வாய்ப்பாக அமைந்தது. இந்நிகழ்வில், மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் பழனிச்சாமி, கொடுமணல் தொல்லியல் துறை அலுவலர் ஜெயப்பிரியா, துணை ஆட்சியர் (வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை பயிற்சி) சித்தார்த், பெருந்துறை வருவாய் வட்டாட்சியர் செல்வகுமார், சென்னிமலை வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.