தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தோழர் கோடியேரி பாலகிருஷ்ணன் நினைவு தின சொற்பொழிவு நமது ஆற்றலைப் புதுப்பிப்போம்! வலுவான கட்சியைக் கட்டுவோம்! - உ.வாசுகி

22 Sept 2026, 9:57 pm
தோழர் கோடியேரி பாலகிருஷ்ணன் நினைவு தின சொற்பொழிவு  நமது ஆற்றலைப் புதுப்பிப்போம்! வலுவான கட்சியைக் கட்டுவோம்! - உ.வாசுகி

தோழர் கோடியேரி பாலகிருஷ்ணன் நினைவு தின சொற்பொழிவு நமது ஆற்றலைப் புதுப்பிப்போம்!

வலுவான கட்சியைக் கட்டுவோம்! - உ.வாசுகி

2026 செப்டம்பர் 20 அன்று கேரளத்தின் கண்ணூர் மாவட்டம் தலச்சேரியில் நடைபெற்ற, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த முன்னாள் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் கோடியேரி பாலகிருஷ்ணன் அவர்களது நான்காவது நினைவு தின கருத்தரங்கைத் துவக்கி வைத்து கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் உ. வாசுகி ஆற்றிய உரையின் பகுதிகள் இங்கு தரப்பட்டுள்ளன. கட்சியின் கண்ணூர் மாவட்டச் செயலாளர் கே.கே. ராகேஷ், முன்னாள் சபாநாயகர் ஏ.என். சம்சீர், வினோதினி பாலகிருஷ்ணன், பினீஷ் கோடியேரி, பினாய் கோடியேரி, மாஹே எம்எல்ஏ அசோக் குமார், டெலிகிராஃப் முன்னாள் ஆசிரியர் ஆர்.ராஜகோபால் உள்ளிட்டோரும், மாநிலம் முழுவதிலுமிருந்து 900க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

நமது அன்புக்குரிய தலைவர் தோழர் கோடியேரிபாலகிருஷ்ணன் நான்கு ஆண்டுகளுக்கு முன் நம்மை விட்டுச் சென்றார். ஆனாலும் அவரது பாரம்பரியம்தொடர்கிறது. அவரது நினைவு நாளில் மட்டுமல்ல, ஒவ்வொரு சூழ்நிலையிலும் நாம்அவரை நினைக்கிறோம்.

கம்யூனிஸ்டுகளின் வாழ்க்கை ஒருபோதும் சாதாரணமானது அல்ல; அது ஒரு புதையல். அவர்களிடமிருந்து ஊக்கம், கருத்தியல் அர்ப்பணிப்பு, மக்கள் மீதான பற்று, தாக்குதல்களை எதிர்கொள்ளும் துணிச்சல், சிரமங்களைத் தாங்கும் திறன் ஆகியவற்றை உள்வாங்குகிறோம். தோழர் வி.எஸ்., தோழர் பினராயி விஜயன் போன்ற முன்னணித் தலைவர்களுடன் இணைந்து பணியாற்றிய கோடியேரி, அர்ப்பணிப்புள்ள கட்சி ஊழியராகவும் தலைவராகவும் திகழ்ந்தார்.

அவரது அரசியல் பணி ஆர்எஸ்எஸ் தாக்குதல்களை எதிர்த்து சிறுபான்மையினரைப் பாதுகாப்பதுடன் ஆழமாகப் பிணைந்திருந்தது; 1970களில் தன் மகனின்வீட்டில் தங்கியிருந்தபோது அவ்வீடே சங் பரிவாரத்தினரால் தாக்கப்பட்டது.

வெறுப்பரசியலுக்கு எதிரான போர்முனை

இன்றும் நாடெங்கும் ஆர்எஸ்எஸ் கருத்தியல் கொண்ட தனிநபர்களும் அமைப்புகளும் சிறுபான்மையினரைத் தாக்குவதிலும், அரசியல் ரீதியாக மாறுபடுவோரைத் துன்புறுத்துவதிலும் ஈடுபட்டுள்ளனர். “இந்தியா ஹேட் லேப்” அமைப்பின் 2026 ஜனவரி அறிக்கையின்படி, 2025இல் மத சிறுபான்மையினருக்கு எதிராக 1,318 வெறுப்புப் பேச்சுகள் பதிவாகியுள்ளன — நாளொன்றுக்குச் சுமார் 4 சம்பவங்கள்; இவற்றில் 97% முஸ்லிம் சமூகத்திற்கு எதிரானவை, பாஜக ஆட்சி நடக்கும் மாநிலங்களே இதில்மதலிடத்தில். பெரும்பாலும் இவைசிறுபான்மையினருக்கு எதிரான நேரடியான, வெளிப்படையான வன்முறையைத் தூண்டுபவை, இழிவான மொழியைபயன்படுத்துபவை. பேச்சு சுதந்திரம் வெறுப்புப்பேச்சிலிருந்து வேறுபட்டது; விமர்சிக்க அனைவருக்கும் உரிமைஉண்டு, ஆனால் அது சட்டத்திற்குட்பட்டதாகஇருக்க வேண்டும் என நாம் சொல்கிறோம். ஆனால் அவர்கள் பேசுவது பெரும்பாலும் அரசியலமைப்புஉத்தரவாதங்களையே மீறுகிறது; தங்களைச்சட்டத்திற்கு மேலானவர்களாக நினைத்துக்கொள்கிறார்கள். உதாரணமாக, அசாம் முதல்வர் முஸ்லிம்களை வெளிப்படையாக அச்சுறுத்துவது பல சட்டங்களுக்கு எதிரானது, ஆனாலும் நடவடிக்கை இல்லை; தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமரும் உள்துறை அமைச்சரும் வெறுப்புப் பேச்சை ஆயுதமாகப் பயன்படுத்தினர். புகார் அளித்தும் தேர்தல் ஆணையம் அமைதியான பார்வையாளராகவே இருந்தது. வெறுப்பை உருவாக்குவது போகிற வருகிற பேர்வழிகளோ ஓரங்கட்டப்பட்ட குழுக்களோ அல்ல; அது ஆர்எஸ்எஸ்–பாஜகவின் உயர் மட்டங்களிலிருந்தே தொடங்குகிறது. கோயபல்ஸைப் போல் பொய்களைப் பரப்பும் தொழிற்சாலையாக அவர்கள் செயல்படுகிறார்கள்.

இன்று அரசியல், சமூக, பொருளாதார, கருத்தியல் துறைகளில் சமரசமின்றி ஆர்எஸ்எஸ்–பாஜகவை எதிர்ப்பது இடதுசாரி சக்திகள் மட்டுமே. எங்குவகுப்புவாதத் தாக்குதல் நடந்தாலும், புல்டோசர்கள் ஏழைகளின் உடைமையை அழித்தாலும் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி தான் தலையிட்டு தடுக்கிறது; போராடுகிறது. எங்கும் அப்படி தடுத்ததாக காங்கிரசால் சொல்ல முடியாது. அதேசமயம், கேரளத்தில் சிறுபான்மை வாக்குகள் தீர்மானகரமான தொகுதிகளில், யுடிஎப் தான் சிறுபான்மையினரின் காப்பாளர் போல்,இடதுசாரிகள் மீது அவதூறு பரப்ப வகுப்புவாதச் சக்திகளுடன் கைகோர்க்கிறது. இக்குற்றச்சாட்டுகளைக் கேரள மக்கள் நிராகரிக்க வேண்டும்.

கேரள மாடலும் நாட்டின் ஏற்றத்தாழ்வும்

தீவிர வறுமையை ஒழித்த இந்தியாவின் ஒரே மாநிலம் கேரளம் — இது பாஜக மாடலிலோ காங்கிரஸ்

மாடலிலோ அல்ல, இடதுசாரி மாடலில் மட்டுமே சாத்தியமானது; தேர்தலை மனதில் வைத்தல்ல, அது இடதுசாரி கருத்தியலின், கட்சித் திட்டத்தின் அங்கமாகவே செய்யப்பட்டது. மறுபுறம், பாஜக பின்பற்றும்நவதாராளமயக் கொள்கைகளே வறுமையையும் சமத்துவமின்மையையும் விரிவாக்குவதற்கு முதல் காரணம் என்பதை நாம் சரியாகக் கண்டறிகிறோம். உலக சமத்துவமின்மை அறிக்கை 2026, இந்தியாவை மிகவும் சமத்துவமற்ற நாடுகளில் ஒன்றாகத் தரவரிசைப்படுத்துகிறது — மேல்தட்டில் உள்ள 10% பேர் தேசிய வருவாயில் 58%-ம் செல்வத்தில் 65%-ம்வைத்திருக்கின்றனர். தொழிலாளிகளும் விவசாயிகளும் உழைக்கும் மக்களும் தமது உழைப்பால் வளங்களை உருவாக்குகின்றனர். ஆனால் அதன் பலன் ஒரு சிலரின் கைகளில் குவிகிறது — இதுவேஇந்நாட்டின் திசையாக உள்ளது. இந்த ஏற்றத்தாழ்வுக்குப் பாலினப் பரிமாணமும் உண்டு; உழைப்பவர்வருமானத்தில் பெண்களின் பங்கு 18% மட்டுமே. ஆனாலும் மோடி அரசு ஜிடிபி வளர்ச்சி 7.8% என அறிவிப்பதுஉண்மைக்கு முற்றிலும் மாறானது.

விலைவாசி கடுமையாக உயர்ந்திருந்தும், சர்வதேச கச்சா எண்ணெய் விலை குறையும்போதும் பெட்ரோல்–டீசல் விலையைக் குறைக்க பாஜக அரசு தயாராக இல்லை. மாறாக, கார்ப்பரேட் கடன்களை ‘ஹேர்கட்’ என்ற பெயரில் குறைக்கும் வேலையைச் செய்கிறார்கள் — பொதுநிதியைக் கார்ப்பரேட் பைகளுக்கு மாற்றுவதன் மறுபெயர் இது. ஜீ டிவி நிறுவனர்சுபாஷ் சந்திராவின் ரூ.22,000 கோடி கடன் உத்தரவாதம் தேசிய கடன் தீர்ப்பாயத்தால் 99.97% குறைக்கப்பட்டது; எதிர்ப்புகளுக்குப் பின் அது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இஸ்ரோ உள்பட பாதுகாப்பு, விண்வெளித் துறைகள் தனியார்மயமாக்கப்படுகின்றன — மோடி, அமித்ஷா யார் பக்கம் என்பது தெளிவு.

மக்கள் எழுச்சியும் ஜனநாயக அழிப்பும்

மக்கள் அதிருப்தி தெருவுக்கு வருமென்பது ஆட்சியாளர்களுக்குத் தெரியும் — தொழிலாளர்–விவசாயிகள் போராட்டங்கள், ஜந்தர் மந்தர் இளைஞர் போராட்டம், சில மாநிலங்களில் பள்ளி மாணவர் போராட்டம், பலமாநிலங்களில் இளம் தொழிலாளர் வேலைநிறுத்தங்கள் இவற்றுக்குச் சான்று. கார்ப்பரேட்டுகளுக்காகஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, விவசாயிகள் பல மாநிலங்களில் பெரும்போராட்டங்களில் உள்ளனர்; கனிமக் கொள்ளைக்காகப் பழங்குடியினர் வெளியேற்றப்படுகின்றனர். பாஜக ஆளும் மேற்கு வங்கம்,மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் சிறப்புச் சட்டங்கள் எந்தவொரு போராட்டத்தையும் அடக்கவும்ஒடுக்கவும் கொண்டுவரப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த ஜனநாயகமும் ஒன்றிய அரசால் தீவிரமாகச்சிதைக்கப்படுகிறது; இவை அனைத்தும் நவ-பாசிசப் பண்புகளை வெளிப்படுத்துவதாகவே, சிபிஐ(எம்) மக்களுக்குத் தொடர்ந்து எச்சரித்து வருகிறது.

உலகின் வேறெந்த நாட்டிலும் இல்லாத வகையில், மக்களின் வாக்களிக்கும் உரிமையைப் பாதுகாக்க வேண்டிய தேர்தல் ஆணையமே, சிறப்பு தீவிரத் திருத்தம் (SIR) என்ற பெயரில் இந்தியாவில் லட்சக்கணக்கான வாக்காளர்களின் உரிமையைப் பறிக்கிறது. மக்கள்தொகை கணக்கெடுப்பு, தொகுதிமறுசீரமைப்பு போன்ற வாடிக்கையான நடவடிக்கைகள் பாஜகவின் கைகளில் ஆபத்தான பரிமாணங்களைப் பெறுகின்றன. சி ஏ ஏ , எஸ் ஐ ஆர், மக்கள்தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுசீரமைப்பு, ஆபரேஷன் லோட்டஸ் மூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மைபெற முயற்சி — இவை அனைத்தும் ஒன்றோடொன்று இணைந்தவை; இந்தியக் குடியரசின் தன்மையை இந்து ராஷ்டிரமாக மாற்றுவதே இவற்றின் பொதுவான நோக்கம். இது எந்த உழைக்கும்மக்கள் பிரிவுக்கும் உதவாது. மக்களின் ஒவ்வொரு பிரிவும் தமது உரிமைகளைப் பாதுகாக்க மோடி அரசுக்குஎதிராகப் போராடுகிறார்கள்; ஆகஸ்ட் 10 சிறை நிரப்பும் இயக்கம் இதற்குச் சமீபத்திய உதாரணம். ஒரு தொழிலாளி வர்க்கக் கட்சியாக, சிபிஐ(எம்) அந்தப் போராட்டத்தை முழுமையாக ஆதரித்து அதன் பின் நின்றது.

யுடிஎஃப் இரட்டை வேடம்

மோடி அரசு கார்ப்பரேட் கடனை ‘ஹேர்கட்’ செய்தால், கேரளத்தில் யுடிஎஃப் அரசு எல்டிஎஃப் கொண்டுவந்த நல்ல திட்டங்களையே ‘கட்’ செய்கிறது. உலகப் புகழ்பெற்ற குடும்பஸ்ரீ திட்டத்தை அழிக்கத் தொடங்கியுள்ளனர்; ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுகின்றனர், ஜனகீயஹோட்டல்களுக்கான ஆதரவு திரும்பப் பெறப்படுகிறது. பெண்களின் வீடுசார் உழைப்புக்கான அங்கீகாரமான மாத ரூ.1,000 பாதுகாப்பு ஓய்வூதியத்தை ஆரம்பத்தில் ஏளனம் செய்த யுடிஎஃப், ஆட்சிக்கு வந்தபின் அதை நிறுத்தி வைத்துள்ளது — இது சங்பரிவாரத்தின் மனுவாதக் கருத்தியலைப் பகிர்வதா என்று முதல்வர் சதீசன் பதிலளிக்க வேண்டும். வீட்டுக்குச்சென்று ஓய்வூதியம் வழங்கும் முறையும் நிறுத்தப்பட்டு, வயதானோர் வங்கிக்குச் செல்லும் சிரமத்தில்தள்ளப்படுகின்றனர். மோடி அரசின் தொழிலாளர் விரோதச் சட்டங்களால் பறிபோன பாதுகாப்புகளை மீட்க நீதிபதி கோபால் கவுடாதலைமையில் குழு அமைத்த ஒரே அரசு எல்டிஎஃப்;அப்பரிந்துரைகளை யுடிஎஃப் என்ன செய்யும் என்பது கேள்விக்குறியே. ஊரக வேலை உறுதிச் சட்டத்தை ஒன்றியஅரசு கலைத்து, மாநிலங்கள் மீது நிதிச்சுமை சுமத்தும் விபி ஜி ராம் ஜி எனும் புதிய சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது — பெண்களும் தலித்துகளும் பெரிதும் பயனடைந்த திட்டத்திற்கான இறுதிச் சடங்கு இது.

பத்தாண்டு எல்டிஎஃப் ஆட்சியில் இல்லாத மின்தடை இப்போது அடிக்கடி நிகழ்கிறது; சமூக

ஊடகங்களில் பல ரீல்கள் இச்சிரமத்தைச் சிரிப்புடன்விவரிக்கின்றன — சிறு குழந்தையும் தாயும் தூங்கும்போது மின்சாரம் போகிறது, “இது கேரள மின்வாரியம்மக்களுக்குச் சொல்லும் குட் நைட் முறை” என அக்குழந்தை நினைக்கும். ஆனால் இரவில் 3–4 முறை ஏன் ‘குட் நைட்’சொல்கிறார்கள் என்ற சந்தேகமும் வரும். யுடிஎஃப் அரசு புதிய வேலைகளை உருவாக்குவதாகச் சொல்லி மகிழ்ச்சியடையலாம், ஆனால் சம்பளம் இல்லை; கொசுக்களைக் கொல்வதே இப்போது கேரள மக்களின் வேலையாகமாறிவிட்டது — மோடியின் பக்கோடா விற்கும் வேலைத்திட்டம் போலவே. காங்கிரஸ் ஆளும் கர்நாடகத்தில் பொதுச் சேவை ஆணையத்திற்கு எதிராக கடும் ஊழல்வெளியாகியிருக்கும் நிலையில், எல்டிஎஃப்-ஐப் பின்தொடர்வதற்குப் பதில் கேரளத்தில் காங்கிரஸ்தன் வீட்டைக் கவனித்துக்கொள்வது நல்லது.

அரசியல் பழிவாங்கலும் மீள்எழுச்சியும்

இடதுசாரிகள் கூர்மையான அரசியல் கேள்விகளை எழுப்புவது மட்டுமல்ல, நடவடிக்கை எடுத்துச்சாதிக்கிறார்கள்; அதனால் பாஜகவும் யுடிஎஃப் பும்அமைதியிழந்து, கூட்டுசேர்ந்து ஆதாரமற்ற கற்பனைக் குற்றச்சாட்டுகளால் சிபிஐ (எம்) தலைவர்களைப் பலியாக்க முயல்கின்றனர். திரைக்கதைகளை உருவாக்குவதில் அவர்கள் மோலிவுட்டில் சிறப்பாகச் செயல்படுவார்கள் என்றே தோன்றுகிறது. சமீபத்தியது தோழர் பினராயி விஜயன், தோழர் ரியாஸ், வீணா ஆகியோருக்கு எதிரானது — அமலாக்கப்பிரிவு முதலில் வழக்குப் பதிவு செய்து, இப்போது ஆதாரங்களை உற்பத்திசெய்ய விரும்புகிறது. யுடிஎஃப் இத்தகைய போலி விஷயங்களுக்கு உதவுகிறது. இக்கூட்டுச் சதிக்கு முன் கட்சிசரணடையாது, எல்லா வழிகளிலும் அதை எதிர்கொள்வோம்; இத்தகைய அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் குரல் எழுப்பவேண்டும்.

கோழிக்கோட்டில் நடைபெற்ற சிபிஐ(எம்) மூன்றுநாள் விரிவடைந்த மாநிலக் குழு கூட்டம் நம்பிக்கையுடன் நிறைவடைந்தது — தேர்தல் தோல்வி எங்களைவீழ்த்தாது, நாங்கள் மீண்டெழுவோம் என்ற உறுதியான செய்தியை அது அனுப்பியது. கம்யூனிஸ்டுகள் தவறுகளை ஏற்றுக்கொள்ளவோ திருத்தவோ தயங்குவதில்லை; மக்கள் நலனுக்காக அரசை நடத்தியும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படாத நிலையைப் பரிசீலித்துநம்மைத் தகவமைத்துக் கொள்ளும் அதேவேளை, மக்கள் உரிமைகளைக் காக்கும் களத்தில் பற்றுறுதியுடன் நிற்கிறோம். இது வெறும் ஆட்சி மாற்றமல்ல — கொள்கை, நிர்வாக, கருத்தியல், சித்தாந்த மாற்றம்என்பதை மக்களுக்குச் சொல்ல வேண்டும்.

நமது ஆற்றலைப் புதுப்பிப்போம்!

கம்யூனிஸ்டுகளாக நாம் மக்களுக்காக, முற்போக்குக் கலாச்சாரத்திற்காக, சமூகத்தின் உண்மையான விடுதலைக்காக நிற்கிறோம். தோழர் கோடியேரி இப்பாரம்பரியத்தில் அசைக்க முடியாதநம்பிக்கை வைத்திருந்தார்; மார்க்சிய சித்தாந்தத்தில் உறுதியாக இருந்தார். இம்முக்கியத் தருணத்தில் அவரைப் போன்ற பல தோழர்கள் நமக்குத் தேவை. நமது ஆற்றலைப் புதுப்பிக்க, வலுவான கட்சியையும் வலுவான இடதுசாரி இயக்கத்தையும் கட்டியெழுப்ப அவரது நினைவுகள் நம்மை வழிநடத்தட்டும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.