கோடாங்கால் கிராமத்தில் 8 மாதங்கள் தண்ணீரில் மூழ்கிக்கிடக்கும் ரயில்வே பாலம்
1 hour before

கோடாங்கால் கிராமத்தில் 8 மாதங்கள் தண்ணீரில் மூழ்கிக்கிடக்கும் ரயில்வே பாலம்

போக்குவரத்து தடைபட்டு பொதுமக்கள்,மாணவர்கள் அவதி

தூத்துக்குடி, ஜுன் 23 - தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு வட்டம் கடம்பூர் பேரூராட்சிக்குட்பட்ட கோடாங்கால் (சங்கரப்பேரி) கிரா மத்தில் உள்ள ரயில்வே கீழ்நிலைப் பாலத்தில் ஆண்டுதோறும் சுமார் எட்டு மாதங்கள் தண்ணீர் தேங்கிக் கிடக்கிறது. இதற்கு நிரந்தரத் தீர்வாக மேல்நிலைப் பாலம் அமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். கிராம மக்களின் போக்குவரத்து வசதிக்காக சுமார் ஐந்து ஆண்டுக ளுக்கு முன்பு ரயில்வே நிர்வாகம் அப் பகுதியில் செயல்பட்டு வந்த ரயில்வே கேட்டை அகற்றி, கோடாங்கால் குளம் அருகே கீழ்நிலைப் பாலம் அமைத்தது. ஆனால் வடகிழக்கு பருவமழை மற்றும் பிற காலங்களில் குளம் நிரம்பும்போது, குளத்து நீர் கசிந்து கீழ்நிலைப் பாலத்திற்குள் புகுந்து விடுகிறது. பாலத்திற்குள் தேங்கும் நீரை மோட்டார்கள் மூலம் வெளியேற்றினாலும், குளத்திலி ருந்து தொடர்ந்து நீர் கசிவதால் பாலம் மீண்டும் மீண்டும் தண்ணீரால் மூழ்கி விடுவதாக கூறப்படுகிறது. இந்தப் பாலம்தான் கோடாங் கால் கிராமத்தை வெளி ஊர்களுடன் இணைக்கும் முக்கிய போக்குவரத்து வழியாக இருப்பதால், நீர் தேங்கும் காலங்களில் கிராம மக்கள் கடுமை யாக பாதிக்கப்படுகின்றனர். குறிப் பாக விவசாயிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் உள்ளிட்டோர் வெளி ஊர்களுக்குச் செல்ல முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஆண்டுதோறும் சுமார் எட்டு மாதங்கள் இந்த நிலை தொடர்வ தால், கிராம மக்கள் வாழ்வாதாரத்தி லும், கல்வியிலும், மருத்துவ சேவை களிலும் பாதிப்பு ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடி யாக தலையிட்டு, பொதுமக்கள் பயன்படுத்த தற்காலிக மாற்றுப் பாலம் அமைத்துத் தர வேண்டும் என்றும், இந்தப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வாக தற்போதைய கீழ்நிலைப் பாலத்தை மேல்நிலைப் பாலமாக மாற்றி அமைக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோ ரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.